நட்பே துணை எப்படி உள்ளது

By Staff

Published:

நேற்று ரிலீஸ் ஆனது நட்பே துணை திரைப்படம். பார்த்திபன் தேசிங்கு என்பவர் இயக்கி இருக்கும் இந்த படமும் கார்ப்பரேட் எதிர்ப்பு படம்தான். இந்த படமும் என்றால் என்ன அர்த்தம் என கேட்பது புரிகிறது.

f9c08f90947f7d5d26f72be2d633f8f2-2

நேற்று ரிலீஸ் ஆன மற்றொரு படமான உறியடி 2 திரைப்படமும் கார்ப்பரேட் பற்றிய படம்தான்.

மீசைய முறுக்கு படத்துக்கு பிறகு ஹிப்ஹாப் ஆதி ஹாக்கி விளையாட்டு வீரராக களமிறங்கி இருக்கிறார்.

வெளிநாட்டு வேலை விசயமாக காரைக்கால் செல்லும் ஆதிக்கு அங்குள்ள ஒரு விளையாட்டு மைதானம் அமைச்சர் கரு. பழனியப்பன் கண்ட்ரோலில் உள்ளதை அறிந்து கொள்கிறார்.

விளையாட்டு மைதானத்தின் கோச்சான ஹரிஷ் உத்தமனும் அமைச்சருக்கு எதிராக இருக்கிறார்.

சர்வதேச ஹாக்கி வீரரான ஆதி சில காரணங்களுக்காக ஹாக்கியே விளையாடாமல் பழைய விஜயகாந்த் பட பாணியில் அதை விட்டு ஒதுங்கி இருக்கிறார்.

ஹரிஷ் உத்தமன் மைதானத்தை கைப்பற்ற துடிக்கிறார் அதற்காக அவர் மிகப்பெரும் ஹாக்கி போட்டியில் சாதிக்க வேண்டிய சூழல் உருவாகிறது.

பெரும் சர்வதேச வீரரான ஆதியை சரிப்படுத்தி விளையாட வைத்து மைதானத்தை அடைய எடுக்கும் முயற்சிகளே கதை.

கதாநாயகி அனகாவுக்கு அதிக வேலையில்லை.

கார்ப்பரேட்டுகளுக்கு உண்மையிலேயே எதிரான கரு.பழனியப்பனை அமைச்சர் வேடத்தில் கார்ப்பரேட் ஆதரவாளராக காட்டியிருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் பேசிய எதற்கெடுத்தாலும் போராட்டம்னா நாடு சுடுகாடாகி விடும் என்ற வசனத்தை கரு.பழனியப்பனை வைத்து பேச விட்டிருக்கிறார்கள்.

மொத்தத்தில் படம், பார்க்கும் ரகம்.

Leave a Comment