சேதுக்கரையில் நடக்கும் பத்தாம் திருவிழா- தீர்த்தவாரி

By Staff

Published:

6aae0f4f8c743b299a4af49f1f9f0e84

ஒவ்வொரு வருடமும் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஆதி ஜெகநாத பெருமாளுக்கும் அங்கிருக்கும் இராமருக்கும் தேர்த்திருவிழா நடக்கும். பங்குனி மாதம் ஜெகநாத பெருமாளுக்கும், சித்திரை மாதம் ராமருக்கும் தேரோட்டம் நடக்கும்.

இதற்கு முன்னதாக ஒரு வாரம் ஸ்வாமி சின்ன பல்லக்கில் வீதி உலா வருவார். அதை ஒண்ணாம் திருவிழா, இரண்டாம் திருவிழா என இவ்வூர் மக்கள் வகைப்படுத்துவர் தேர்த்திருவிழா நடக்கும் நாள் 9ம் திருவிழாவாகவும் தேருக்கு அடுத்த நாள் 10ம் திருவிழா ஆகவும் கொண்டாடப்படும்.

10ம் திருவிழாவின் சிறப்பு என்ன என்றால் இங்குள்ள ஸ்வாமிகள் 9ம் திருவிழாவை முடித்து விட்டு 10ம் தேதி அன்று சேதுக்கரை கடலில் தீர்த்தவாரி செய்து அதாவது சேதுக்கரை கடலில் ஸ்வாமி சிலையோடு புரோகிதர்களும் கடலில் மூழ்கி ஸ்னானம் செய்வர் பின்னர் சேதுக்கரையில் ஸ்வாமி எழுந்தருளுவார் இது வருடா வருடம் நடக்கும் திருவிழா ஆகும்.

Leave a Comment