உதடு ஒட்டாமல் வாலி எழுதிய பாடல்

By Staff

Published:

பாடல்களில் வித்தியாசங்கள் காட்டுவது இளையராஜாவுக்கு வாடிக்கை. இசையமைத்த 1000 படங்களிலும் ஒவ்வொரு பாடலிலும் ஏதாவதொரு வித்தியாசத்தை காண்பித்திருப்பார்.

4a77bb21a1b045bb64a63fbc98e35c45-1

இளையராஜாவை மியூசிக் மேஜிசியன் என சும்மா சொல்லவில்லை பாடல்களில் பல வித்தைகளை காட்டி கேட்கும் நம்மை கிரங்கடிப்பவர்.

அவர் கேட்கும் விதத்தில் பாடல் எழுதித்தர வாலி போன்ற முக்கிய கவிஞர்கள் அன்று இருந்துள்ளனர்.

அப்படி வாலி எழுதிய பாடல்தான் தந்தேன் தந்தேன் இசை செந்தேன் என்ற பாடல். இப்படம் வில்லுப்பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்றது. கதையின் காட்சிகேற்ப கதாநாயகனிடம் நாயகி உதடு ஒட்டாமல் பாட சொல்ல அதற்கேற்ற வகையில் இப்பாடல் உருவானது.

மிக சிறப்பான இந்த பாடல் முழுவதும் ஒருவர் பாடினால் அவரது உதடுகள் ஒட்டவே ஒட்டாது அப்படி ஒட்டாமலே வரிகள் வருமாறு வாலி பாடல் எழுதி அசத்தி இருப்பார்.

இப்படி ஒரு இனிய பாடலை ராமராஜனின் பின்னணி குரலாக மலேசிய வாசுதேவன் பாடி இருந்தார்.

இப்படியொரு இசைச்சாதனையை வாலியையும் இசைஞானி இளையராஜாவையும் தவிர யாரும் செய்ய மாட்டார்கள்.

அது ஒரு அழகிய நிலாக்காலம். பாடல்களின் சொர்க்க காலம்.

Leave a Comment