கடந்த 1991ம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்காக தமிழகம் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விஷயத்தை சினிமாக்காரர்களும் கையில் எடுத்தனர்.
ஏற்கனவே ஆட்டோ ஷங்கர் சுவற்றில் பெண்களை வைத்து பூசியதை எல்லாம் தனது புலன் விசாரணை படத்தில் இடம்பெற செய்த ஆர்.கே செல்வமணி இந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு படம் இயக்க வேண்டும் என்று 91 ஜூலையிலேயே குற்றபத்திரிக்கை என பெயர் வைத்து படம் இயக்கி 92 தீபாவளியின்போதே இப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் வந்து விட்டது
பிரபல ஹிந்தி நடிகர் அனுபம் கேர் ராஜீவ்காந்தி வேடத்தில் நடித்திருந்தார்.ராம்கி, ரஹ்மான், ரோஜா உள்ளிட்டவர்கள் நடித்திருந்த இப்படம் கடும் அரசியல் எதிர்ப்பால் பல வருடம் வராமலேயே முடங்கி கிடந்தது. சென்சாரில் பல கத்தரிகள் திரும்ப திரும்ப வாங்கிய இந்த படம் 16 வருடங்களுக்கு 2007 திரைக்கு வந்தது.
இந்திய சினிமாக்களில் ஒரு படம் ரிலீசுக்கு தயாராகி நீண்ட நாள் கழித்து ரிலீஸ் ஆன படம் இதுவாகத்தான் இருக்கும்.