நடிகர் செந்திலின் பிறந்த நாள் இன்று சிறப்பு பதிவு

By Staff

Published:

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூரை சேர்ந்தவர் செந்தில். சிறு வயதிலேயே சென்னைக்கு சென்ற செந்தில் சினிமாவில் நடிக்க தீவிர முயற்சி செய்தார்.

a2d8bf519e87a214c0cadff72665a457

சின்ன சின்ன நாடகங்களிலும் நடித்துள்ள செந்திலுக்கு முதல் படமே மலையாள படமாகும். இதிக்கார பக்கி என்ற மலையாளப்படத்தில்தான் இவர் முதலில் நடித்தார்.

பாக்யராஜால் பொய் சாட்சி, தூறல் நின்னு போச்சு படங்களின் மூலம் பிரபலமான செந்தில். பிரபல நகைச்சுவை எழுத்தாளர் வீரப்பனின் நகைச்சுவை எழுத்தால் உதயகீதம் ,கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானார்.

அதன் பின் பல்லாயிரக்கணக்கான படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

கவுண்டமணி செந்தில் என்ற மாபெரும் நகைச்சுவை ஜோடி என்று புகழப்பட்டு, காலம் பல கடந்தாலும் இவரின் காமெடிகள் இன்றைய தலைமுறையினர் வரை பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது.

அடி வாங்கியே நடித்தாலும் ஜனங்களை சரவெடியாய் சிரிக்க வைத்த மஹா கலைஞன் செந்தில் ஆவார்.

Leave a Comment