பெருமாளுக்கான புரட்டாசி மாத விரதம் இருக்கும் முறை!!

பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதமாகும், பெருமாளின் அனுகூலத்தைப் பெற விரும்புவோர் புரட்டாசி முழுவதும் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். மேலும் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபடுவோர் அசைவ உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும். மேலும்…

52b4d0d4766a1d372c837256d40488b8-1

பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதமாகும், பெருமாளின் அனுகூலத்தைப் பெற விரும்புவோர் புரட்டாசி முழுவதும் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். மேலும் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபடுவோர் அசைவ உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும்.

மேலும் புரட்டாசி மாதத்தில் சனிக் கிழமைகளில் பெருமாளுக்கு ஏற்ற விரதத்தை செய்வது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம். அதாவது காலையில் எழுந்து வீடு, வாசல் அனைத்தையும் துடைத்து விடவும், மேலும் பூஜை அறையில் பெருமாள் புகைப்படத்தை வைத்து பூ கொண்டு அலங்கரிக்கவும்.

அடுத்து சாதம், சாம்பார், ரசம், பொரியல், கூட்டு, வடை, அப்பளம், பாயாசம், கேசரி என அனைத்துவகையான சைவ உணவுகளையும் ருசி பார்க்காமல் சமைத்துப் படையலிட வேண்டும்.

மேலும் வாழை இலையில் படையலிட்டு அனைத்து வகையான உணவுப் பொருட்களையும் வைத்து சாம்பிராணி ஏற்றி, தீபம் ஏற்றி கற்பூரம் கொளுத்தி பெருமாளை வழிபட வேண்டும்.  மேலும் படையலிட்ட பின்னர் விஷ்ணுவிற்கு உரிய மந்திரங்களை ஜெபித்து வழிபட வேண்டும்.

மேலும் பூஜை முடிந்ததும், காக்கைக்கு சோறிட்டு நாம் நம் விரதத்தை முடிக்க வேண்டும். இந்த விரதத்தை புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் நாம் கடைபிடிக்க வேண்டும், மேலும் 4 சனிக்கிழமைகளை விடுத்து தேர்க் கிழமை என்னு சிறப்பு தினத்தன்று நாம் கடைபிடித்தல் சிறப்பான பலனைத் தரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன