திருமணம் கைகூட கல்யாண வெங்கடேசப் பெருமாள் வழிபாடு!!

இன்றைய இளைஞர்கள் கொண்டிருக்கும் பிரச்சினைகளில் ஒன்று திருமணம் கைகூடாமை தான். திருமணம் கை கூட வேண்டுமெனில் பல வகையான பரிகாரங்கள், தோஷ நிவர்த்திகள், கோயில் வழிபாடுகள் போன்றவற்றினை செய்வது குறித்து நாம் பார்த்திருப்போம். என்ன…

6be2e9287b30d53621532030addc9a40-2

இன்றைய இளைஞர்கள் கொண்டிருக்கும் பிரச்சினைகளில் ஒன்று திருமணம் கைகூடாமை தான். திருமணம் கை கூட வேண்டுமெனில் பல வகையான பரிகாரங்கள், தோஷ நிவர்த்திகள், கோயில் வழிபாடுகள் போன்றவற்றினை செய்வது குறித்து நாம் பார்த்திருப்போம்.

என்ன பரிகாரங்கள் செய்தாலும் திருமணம் கைகூடவில்லையே என வருத்துவோருக்கான சிறப்பான பரிகாரம்தான் கல்யாண வெங்கடேசப் பெருமாளின் அனுகூலத்தைப் பெறுவதற்கான வழிபாடு ஆகும்.

அதாவது திருவண்ணாமலையில் நார்த்தாம்பூண்டியில் கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது. அந்தக் கோவிலுக்கு தினசரிக்கும் குவியும் பக்தர்கள் பல ஆயிரக் கணக்கில் இருப்பர். அவர்களில் அதிகம்பேர் திருமணம் கைகூட வேண்டும் என்று நினைத்து பரிகாரம் செய்வோர்களாகவே இருப்பர்.

அதாவது பெருமாள் கோவிலில் காலை முதல் யாரும் உணவு ஏதும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும், மேலும் அங்குள்ள குளத்தில் குளித்து ஈரத்துணியுடன் கல்யாண வெங்கடேசர் சன்னதி முன்னர் மட்டைத்தேங்காய் வைத்து வழிபட வேண்டும்.

மேலும் மனமுருகி இறைவனை வேண்டிக் கொண்டு 27 முறை வலம் வர வேண்டும், உண்மையில் மட்டைத் தேங்காய் வழிபாடானது இந்தக் கோயிலில் மிகவும் பிரபலமானது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன