சக்தி வாய்ந்த ஆஞ்சநேயருக்கான விரதம்!!

இராமனின் மிகப் பெரும் பக்தனான ஸ்ரீ ஆஞ்சநேயர் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக இருந்தவர். அவர் பிரம்மச்சாரியாக இருந்தாலும், திருமண வரம் வேண்டுவோருக்கு வரம் அருள்கிறார். திருமண வரம் வேண்டுவோர் ஸ்ரீ ஆஞ்சநேயரின் அனுகூலத்தைப்…

822513cfb91e83888fc71a483dfd3595

இராமனின் மிகப் பெரும் பக்தனான ஸ்ரீ ஆஞ்சநேயர் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக இருந்தவர். அவர் பிரம்மச்சாரியாக இருந்தாலும், திருமண வரம் வேண்டுவோருக்கு வரம் அருள்கிறார்.

திருமண வரம் வேண்டுவோர் ஸ்ரீ ஆஞ்சநேயரின் அனுகூலத்தைப் பெற வேண்டுமெனில், விரத இருந்து வழிபட வேண்டும். அதாவது ஆஞ்சநேயருக்கு விரதம் இருப்போர், வடையால் மாலை கொய்ய வேண்டும், மேலும்  அதனை கோயிலுக்குச் சென்று கொடுத்து சாத்த வேண்டும்.

மேலும் அனுமனின் சன்னதியை 108 முறை சுற்றி வந்து, அனுமனை வழிபட்டு வீடு திரும்புதல் வேண்டும். மேலும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வீட்டில் அனுமனுக்கான பூஜை செய்தல் வேண்டும்.

அதாவது வீட்டில் வெற்றிலையில் மாலை கொய்து, அனுமன் புகைப்படத்தை துடைத்து வெற்றிலை மாலையினை சாற்ற வேண்டும், அடுத்து வெண்ணெயில் தீபம் ஏற்றி கற்பூரம் ஏற்றி சர்க்கரைப் பொங்கல், சுண்டல், உளுந்து வடை சேர்த்து படைத்தல் வேண்டும்.

மேலும் படைத்த உணவினை காக்கைக்கு வைத்து பூஜையினை முடித்தல் வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன