எண்பதுகளில் முன்னனி பின்னணி பாடகராக இருந்தவர் எஸ்.என் சுரேந்தர் இவரது பல பாடல்கள் இன்றளவும் பலருக்கு ஆல் டைம் பேவரைட். இளையராஜா இசையில் எஸ்.என் சுரேந்தர் பாடிய பல பாடல்கள் இன்றளவும் ஹிட் பாடல்கள் ஆகும்.
இளையராஜா இசையில் தேவன் கோவில் தீபம் ஒன்று,மங்கை நீ மாங்கனி உள்ளிட்ட பாடல்கள், மனோஜ் கியான் இசையில் ஊமை விழிகளில் இடம்பெற்ற கண்மணி நில்லு, மாமரத்து பூவெடுத்து உள்ளிட்ட பாடல்கள் புகழ்பெற்றவை.
பின்னணி பாடகர் எஸ்.என் சுரேந்தர் வேறு யாருமல்ல இளையதளபதி நடிகர் விஜய்யின் சொந்த தாய்மாமா அதாவது அவர் அம்மா ஷோபாவின் தம்பிதான் எஸ்.என் சுரேந்தர்.
எஸ்.என் சுரேந்தர் ஒரு நடிகருக்கே, தொடர்ந்து பின்னணி குரல் கொடுத்து அந்த நடிகருக்கே உண்டான குரல் போல் மாறிய காலமும் இருந்தது.
நடிகர் மோகன் தான் அந்த நடிகர். மோகனின் பல படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்து இருப்பவர் எஸ்.என் சுரேந்தர் தான்.
அவரின் பிறந்த நாள் இன்று.