மலேசியா வாசுதேவன் நினைவு தின பதிவு

By Staff

Published:

எண்பதுகளில் தவிர்க்க முடியாத பாடகர் என்றால் அது மலேசியா வாசுதேவன் கணீர் குரலில் உச்சஸ்தாயில் மலேசியா வாசுதேவன் பாடல் பாடினால் சாப்பாடு தண்ணீரே தேவையில்லை கேட்டுக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு சிறப்பான பாடல்களை கொடுத்தவர் மலேசியா வாசுதேவன்.

59f99472880371a5f523536f680a398c

பாலக்காட்டை பூர்விகமாக கொண்ட மலேசியா வாசுதேவன் பிறந்து வளர்ந்தது சிறுவயது காலங்களில் மலேசிய நாட்டில்தான். பின்பு இந்தியாவுக்கு வந்து இசையமைப்பாளர் வி குமார் இசையில் பாடினார். இளையராஜா சகோதரர்களின் மியூசிக் ட்ரூப்பில் பாடினார். குமாஸ்தாவின் மகள் உள்ளிட்ட படங்களில் பாடினார்.

இளையராஜா இசையமைப்பாளர் ஆன பிறகு மலேசிய வாசுதேவன் குரலுக்கு மிக முக்கியத்துவம் அளித்தார். 16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடலை பாடியதன் மூலம் மிகப்பெரும் புகழ்பெற்றார் மலேசியா வாசுதேவன்.

சிதம்பரம் ஜெயராமன் குரலில் மணிப்பூர் மாமியார் படத்தில் இவர் பாடிய ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே பாடல் கேட்க கேட்க திகட்டாத இனிப்பான பாடல்.

மென்மையான டூயட்களில் மலேசியா வாசுதேவன் குரல் அதிகம் ஒலிக்காது அதிரடி டூயட் பாடல் பலவற்றில் மலேசியா வாசுதேவன் குரலே ஒலிக்கும்.

சொக்குப்பொடி கக்கத்துல வச்சிருக்கேன், பச்ச மிளகாய் அது காரமில்ல, உன்னை பார்த்த நேரம், நிலாக்காயுது நேரம் நல்ல நேரம் , சீவி சிணுக்கெடுத்து உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான ஹிட் பாடல்களை பாடியுள்ளார் மலேசியா வாசுதேவன்.

மலேசியா வாசுதேவனின் அருமையான பாடல்களை இந்த கட்டுரையில் முழுவதுமாக சொல்லிவிட இயலாது

அதிரடி பாடல்களாக பாடிய இவரை பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இடம்பெற்ற கோடைகால காற்றே என்ற மிக மிக அருமையான இனிமையான பாடலை பாடவைத்தார் இளையராஜா.

பாடல்கள் பாடுவது மட்டுமல்லாமல் நடிப்பதிலும் மலேசியா வாசுதேவன் வல்லவர். ஏலக்காய் மாழை எங்க இருக்கோ அங்க எல்லாம் இந்த ஏற்காடு சுப்ரமணியன் இருப்பான்னு பாண்டியராஜன் நடித்த ஊரை தெரிஞ்சிக்கிட்டேன் படத்தில் வில்லத்தனம் செஞ்சிருப்பார். அது போல கதாநாயகன், கமல் நடித்த ஒரு கைதியின் டைரி உள்ளிட்ட படங்களில் வில்லத்தனம் செய்திருப்பார்.

பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருப்பார்.

நேற்று 20.2.1019 டன் அவர் இறந்து9 வருடங்கள் நிறைவு பெறுகிறது

Leave a Comment