ஆவணி மாத இறுதியில் நம்மில் பெரும்பாலானோர் வீடுகளை சுத்தம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஏனெனில் அடுத்து வரும் புரட்டாசி மாத விரதத்திற்கு தான். இந்த மாதத்தில் சனிக் கிழமை விரதம் இருந்து பெருமாளை வழிபடுவார்கள். இது ஏன் என்று ஒருமுறை சிந்தித்தது உண்டா….
புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். மேலும் இந்த மாதம் கன்னி ராசிக்கு உகந்த மாதமாகும். புரட்டாசியில் புதன் கிரகம் நன்றாக இருக்கும்.
அதெல்லாம் சரி, ஏன் பெரும்பாலான மக்கள் இம்மாதத்தில் அசைவ உணவு வகைகளை எடுத்துக் கொள்வது இல்லையென்றால் புதன் கிரகம் ஒரு சைவத்திற்கு உகந்த கிரகமாகும்.
அதனால் தான் அசைவத்தை தவிர்த்து சைவ உணவை எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் இம்மாதங்களில் பெருமாளுக்கு விரதம் இருந்து அவரை வணங்கி அவருக்கு படையலிட்டு சாப்பிட்டால் குடும்பத்திற்கு பண வரவும், மகிழ்ச்சியும் ஏற்படும் என்பது அனைவரின் நம்பிக்கை.
மேலும் அறிவியல் பூர்வமான நம்பிக்கை என்னவெனில் இம்மாதத்தில் சூரியனின் ஒளி மிக குறைவாக இருக்கும். மேலும் பூமியின் சுழற்சியின் காரணமாக ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் அசைவ உணவுகள் செரிமானம் ஆகாது. இதனால் தான் இவற்றை தவிர்த்து விட்டு நாம் சைவ உணவுகளை எடுத்துக் கொள்கிறோம்.