வரும் 27ல் மாசி மகம் – திருக்கோஷ்டியூர் செல்ல மறவாதீர்

By Staff

Published:

3e24d589b58b33082016bf91c395fc82

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரத்தன்று புனித நாளாக கருதப்பட்டு பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல் , வழிபாடு செய்தல் என காலம் காலமாக வழிபாடுகள் நடந்து வருகிறது. கும்பகோணம் மகாமக குளத்தில் ஒவ்வொரு மாசி மகம் நட்சத்திரம் வரும் நாளில் நீராடி வழிபாடுகள் நடந்தாலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கு மகாமகம் என்று மிகப்பெரிய விழாவே நடக்கும்.

அதுபோல தென்மாவட்டங்களில் மிகப்பெரிய திருவிழாவாக  நடப்பது சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் கோவிலில் நடக்கும் தெப்பத்திருவிழா ஆகும்.

இந்த திருவிழாவிற்கு அருகில் உள்ள மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, அருகாமை மாவட்ட மக்களும் அதிக அளவில் வந்து பங்கேற்பர்.

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். நாராயணர் மந்திரத்தை ஸ்ரீராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோவில் கோபுரத்தின் மேலேறி ஊர் மக்களுக்கும் உலகுக்கும் உரைத்த இடமாகும்.

இந்த கோவில் தெப்பக்குளத்தில் விளக்கு விடும் திருவிழா வருடா வருடம் நடக்கிறது. இங்கு சென்று விளக்கு விட்டு விட்டு திருமணத்தடை, குழந்தையின்மை என்று வாழ்வில் பல பிரச்சினைகள் இருந்தால் அந்த பிரச்சினைகளுக்காக விளக்கு விட்டு விட்டு ஒரு விளக்கை எடுத்து வந்து விட்டால் அடுத்த வருடத்திற்குள் நம் பிரச்சினை தீர்ந்து விட்டால் எடுத்து வந்த விளக்கை விடுகிறேன் என வேண்டி கொள்ள வேண்டும்.

வருடா வருடம் இங்கு அதிக அளவு கூட்டம் கூடுவதற்கு காரணம் இங்கு விளக்கு விடுபவர்களின் பிரார்த்தனைகள் பெருமளவு பலிக்கிறது என்பதேயாகும்.

இந்த திருவிழாவிற்கு ஒரு முறை சென்று வாருங்கள் வாழ்வில் வளம் பெறுங்கள்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து இந்த கோவிலுக்கு செல்லலாம்.பஸ் வசதி அடிக்கடி உள்ளது.

Leave a Comment