உச்சிஷ்டம் என்றால் மிச்சம் அல்லது எச்சம் என்று பொருள். இந்த உலகில் படைக்கப்பட்ட அனைத்தும் அழிந்தே தீரவேண்டுமென்பது நியதி. ஆனா, அவை முழுவதுமாக அழிவதில்லை. அனைத்திலும் மிச்சம் இருக்கும் இதுவும் ஒரு நியதி. அப்படி மிச்சம் வைக்க காரணம் அதையே மூலமாக்கி மற்றொன்று தோன்றும். இப்படி அழிவதும், அழிவதுமிலிருந்து தோன்றுவதுமே உலக வழக்கம்.
இந்த உலகம் அழியும் பொழுதும் நிலம், நீர், நெருப்பு இந்த மூன்றில் எதாவது ஒன்று மிச்சம் இருக்கும். மிச்சமிருக்கும் மூன்றில் எதாவது ஒன்றையே மூலமாக்கி மீண்டும் ஒரு உலகம் உருவாகும் . இப்படி ஆக்கலும் அழித்தலும் ஒன்றாய் நிற்கும் சக்தியே உச்சிஷ்டம். தாய்மை அடைவதே பெண்ணாய் பிறந்தவளுக்கு புகழை தரும். நற்பண்புகள் கொண்ட பிள்ளைகள் பிறக்கவேண்டுமென்பதே தம்பதியர்களின் வேண்டுதலாக இருக்கும்.. பெண் உறுப்பில் தும்பிக்கை வைத்தபடி இருக்கும் இந்த உச்சிஷ்ட கணபதியை வணங்கினால் அரக்க குணம் கொண்ட பிள்ளைகள் பிறப்பதை தடுப்பார். ஒருவேளை அரக்ககுணம் கொண்ட குழந்தை பிறந்தால் அவரே அதை அழிப்பார் என உணர்த்துவதே உச்சிஷ்ட கணபதியின் தோற்ற விளக்கமாகும்.
உச்சிஷ்ட கணபதி மந்திரம்
ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்தி முகாய,லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம்
ஹ்ரீம் கம் கேகே ஸ்வாஹா
மந்திரம் சொல்லும் முறை..
சக்தி வாய்ந்த இந்த உச்சிஷ்ட கணபதி மந்திரத்தினை சொல்லி கணபதியை வழிபடலாம் என்றாலும் மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தி, வளர்பிறை சதுர்த்தி தினங்களில் மாலை 5 லிருந்து 6 மணிக்குள்ளாக, வீட்டில் இருக்கும் கணபதி படத்திற்கு பூக்களை வைத்து, ஊதுவத்தி கொளுத்தி, கொழுக்கட்டை அல்லது லட்டு இனிப்புகளை நைவேத்தியம் செய்து, மேற்சொன்ன மந்திரத்தினை 108 அல்லது 1008 முறை கூறி வழிபட வேண்டும். பின்பு நைவேத்திய இனிப்புகளை தானம் செய்து நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் உண்ணவேண்டும்.
இப்படி வழிபடுவதால் நேர்மையாய் நீங்கள் விரும்பியவை உங்களுக்கு கிடைக்க தொடங்கும். கணவன் மனைவிக்கிடையில் ஒற்றுமை பலப்படும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்றிணைவர். கண் திருஷ்டி நீங்கும்.