ஆடிக்கிருத்திகையில் இப்படி விரதமிருந்து முருகனை வழிபட்டால் எதிரி பயம் நீங்கும்.

கிழமைகளில் செவ்வாயும், திதிகளில் சஷ்டியும், நடத்திரங்களில் கிருத்திகையும் முருகனுக்கு உகந்தது. மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வரும். ஓரிரு மாதத்தில் மாதத்திற்கு இரு கிருத்திகை நட்சத்திரம் வரும். கிருத்திகை நாளில் விரதமிருந்து வழிபட்டால் எதிரி பயம்…

கிழமைகளில் செவ்வாயும், திதிகளில் சஷ்டியும், நடத்திரங்களில் கிருத்திகையும் முருகனுக்கு உகந்தது. மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வரும். ஓரிரு மாதத்தில் மாதத்திற்கு இரு கிருத்திகை நட்சத்திரம் வரும். கிருத்திகை நாளில் விரதமிருந்து வழிபட்டால் எதிரி பயம் நீங்கும். ஞானத்தில் சிறந்து விளங்கலாம்.

ஆடிக்கிருத்திகை, கார்த்திகை கிருத்திகை, தைக்கிருத்திகை என மூன்று கிருத்திகைகளே முக்கோடி கிருத்திகை என அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்தவை. தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை வரும். உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.

கிருத்திகை விரதமிருப்பவர் அதிகாலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, வீட்டை தூய்மைப்படுத்தி காலை உணவெதும் உட்கொள்ளாமல் மதியம் உப்பில்லா உணவை முருகனுக்கு படைத்து , அதை உண்டு, இரவு பால் பழத்தோடு விரதத்தை முடிக்க வேண்டும். பூஜையில் மாவிளக்கு இடுவது அவசியம், அன்றைய சமையலில் வடை, பாயாசம், முருங்கைக்கீரை அவசியம் சேர்க்கவேண்டும்.   காலமாற்றத்தில் உப்பில்லாமல் உணவு படைப்பதும், புண்ணிய தீர்த்தத்தில் நீராடுவதும் நின்று போயிற்று.. அன்றைய தினம் கந்தர் சஷ்டி, கந்தர் அலங்காரம், திருப்புகழ் ஆகியவற்றை இறைசிந்தனையோடு பாராயணம் செய்து, மறுநாள் ரோகிணியன்று விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

எல்லா முருகன் கோயில்களிலும் ஆடிக்கிருத்திகையன்று பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, திருவீதி உலா என விமரிசையாக பல விழாக்கள், உற்சவங்கள் நடைப்பெறும்.  பழனி,. திருச்செந்தூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் விசேஷமென்றாலும் திருத்தணி முருகன் கோவில்தான் ஆடிக்கிருத்திகைக்கு மிக விசேசமானது. இந்நாளில், திருத்தணி முருகன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த உலகெங்கும் இருந்து பக்தர்கள் வருவர்.  இங்கிருக்கும் சரவணப்பொய்கையில் மூன்று நாட்கள் இரவு வேளையில் தெப்போற்சவம் நடக்கும்.   காவடி பிரியனான முருகனுக்கு நேர்த்திக்கடனாய் காவடி எடுப்பதும், முடிக்காணிக்கையும் ஆடிக்கிருத்திகையில் நிகழும்.

ஆடிக்கிருத்திகை நாளில் விருதமிருந்து வழிபடுவோருக்கு முன் ஜென்ம வினைகள் யாவும் தீரும்..

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன