ஸ்வர்ண கௌரி என்னும் பெண் தெய்வம் பராசக்தியின் அம்சம். வெள்ளிக்கிழமையில் பெண் தெய்வங்களை வணங்குவது சிறப்பான பலனை தரும். இன்றைய வெள்ளிக்கிழமை ஸ்வர்ண கௌரியினை வனங்குவோம். ஸ்வர்ண கௌரியை வணங்கும்போது சொல்லவேண்டிய மூல மந்திரம்..
ஓம் ஸ்ரீம் க்லீம் ஐம்ஹ்ரீம் நமோ பகவதி
ஸர்வார்த்த ஸாதகி, ஸர்வலோகவசங்கரி,
தேவி ஸௌபாக்ய ஜனனி, ஸ்ரீம் ஹ்ரீம்
ஸம்பத் கௌரி தேவி, மம ஸர்வ
ஸம்பத்ப்ரதம் தேஹி குருகுரு ஸ்வாஹா
சக்தியின் அம்சமான கௌரி தேவிக்குரிய மூல மந்திரம் இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்து, மனதில் சக்தி தேவியை தியானித்து 108 முறை உச்சரித்து அவளை வணங்கினால் நற்பலன் கிடைக்கும். தினமும் முடியாதவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இம்மந்திரத்தை 108 அல்லது 1008 முறை ஜபிப்பதால் குழந்தைப் பேறு கிடைக்கும். வாழ்வில் தொடர்ந்து துன்பங்கள், கஷ்டங்கள் ஏற்படும் நிலை மாறி வளமும், மகிழ்ச்சியும் உண்டாகும். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் கோரிக்கைகள் நிறைவேறும்.
நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!