சோழர்களின் காவல் தெய்வமான உறையூர் வெக்காளியம்மன் 108 துதி

உறையூரை தலைநகரா கொண்ட சோழ மன்னர்களின் வெற்றிக்கும் வீரத்திற்கும் காரணமானவள் இந்த வெக்காளியம்மன், இவளே அவர்களின் காவல் தெய்வமும்கூட!! உறையூரில் அருளும் வெக்காளியம்மனின் 108 துதி. 1.ஓம் சக்தியே போற்றி! 2.ஓம் இச்சா சக்தியே…


உறையூரை தலைநகரா கொண்ட சோழ மன்னர்களின் வெற்றிக்கும் வீரத்திற்கும் காரணமானவள் இந்த வெக்காளியம்மன், இவளே அவர்களின் காவல் தெய்வமும்கூட!! உறையூரில் அருளும் வெக்காளியம்மனின் 108 துதி.

1.ஓம் சக்தியே போற்றி!

2.ஓம் இச்சா சக்தியே போற்றி!

3.ஓம் ஞான சக்தியே போற்றி!

4.ஓம் வெக்காளி அம்மயே போற்றி!

5.ஓம் ஆதி சக்தியே போற்றி!

6.ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி!

7.ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி!

8.ஓம் ஏழைகளின் தாயே போற்றி!

9.ஓம் மங்கல நாயகி போற்றி!

10 ஓம் மதுரையை எரித்தாய் போற்றி!

11. ஓம் ஈசனின் தேவி போற்றி!

12. ஓம் இடபாகம் அமர்ந்தாய் போற்றி!

13. ஓம் தில்லைகாளியே போற்றி!

14. ஓம் சிறுவாச்சூர் காளியே போற்றி!

15. ஓம் அம்மை உமையே போற்றி!

16.ஓம் ஆனந்த வல்லி போற்றி!

17. ஓம் மாயனின் தங்கை போற்றி!

18. ஓம் மணி மந்திரகாளி போற்றி!

19. ஓம் ஆனந்த நடனமாடும் தேவியே போற்றி!

20. ஓம் செங்கண்மா தங்கை போற்றி!

21. ஓம் சிதம்பரம் காளி போற்றி!

22. ஓம் வேலனின் தாயே போற்றி!

23. ஓம் வேல் தந்த வித்தகி போற்றி!

24. ஓம் சந்தன காப்பில் சிரிப்பாய் போற்றி!

25. ஓம் சங்கரன் நாயகி போற்றி!

26.ஓம் உறையூரின் தேவி போற்றி!

27. ஓம் உள்ளத்தில் நிறைந்தாய் போற்றி!

28. ஓம் மங்கையர்க்கரசி போற்றி!

29.ஓம் மாணிக்க வல்லி போற்றி!

30. ஓம் கருணை உள்ளம் கொண்டாய் போற்றி!

31. ஓம் கற்பகத்தருவே போற்றி!

32. ஓம் கனக வல்லியே போற்றி!

33. ஓம் காரணி பூரணி போற்றி!

34. ஓம் தக்கன் கடை மொழிதாய் போற்றி !

35. ஓம் சாம்பவி சங்கரி போற்றி!

36. ஓம் அங்கையர் கண்ணி போற்றி!

37. ஓம் ஆதிபராசக்தியே போற்றி!

38. ஓம் வெட்ட வெளியில் அமர்ந்தாய் போற்றி!

39. ஓம் வெக்காளி தேவியே போற்றி!

40.ஓம் மோகத்தை அழிப்பாய் போற்றி!

41. ஓம் முக்கண்ணன் தேவியே போற்றி!

42. ஓம் சிம்ம வாகினியே போற்றி!

43. ஓம் சிக்கலை தீர்ப்பாய் போற்றி!

44. ஓம் மக்கள் மனதில் நிறைந்தாய் போற்றி!

45. ஓம் மழலைச் செல்வம் தருவாய் போற்றி!

46. ஓம் தத்துவ பொருளே ஆனாய் போற்றி!

47. ஓம் சாம்பவி சங்கரி மனோன்மணி போற்றி!

48. ஓம் சரணாபுயத்தி சம்ஹாரியே போற்றி!

49. ஓம் நமோ பகவதி உத்தமி போற்றி!

50. ஓம் பஞ்சாசர பகவதி போற்றி!

51. ஓம் எஞ்சாகரத்தி இன்பதாண்டவியே போற்றி!

52. ஓம் ஆணவம் அகற்றிஆட்கொள்வாய் போற்றி!

53. ஓம் நவ வடிவான நாராயணி போற்றி!

54. ஓம் ஜோதி சுடராய் ஜொலிப்பாய் போற்றி!

599bf850ace98b28662ecff0fdf630aa

55.ஓம் சிவ சிவ சிவசங்கரி போற்றி!

56. ஓம் தந்தையும் தாயும் ஆனாய் போற்றி!

57. ஓம் இடைப்பின் தலையில் இருப்பாய் போற்றி!

58. ஓம் கடை சுழி முனையில் கலந்தாய் போற்றி!

59. ஓம் முச்சுடராகி முளைந்தாய் போற்றி!

60. ஓம் மூலத்தில் நின்ற முதல்வியே போற்றி!

61. ஓம் ஜாலங்கள் புரியும் சமர்ப்பியே போற்றி!

62. ஓம் ஒரெழுத்தான உத்தமியே போற்றி!

63. ஓம் ஈரெழுத்தான ஈஸ்வரியே போற்றி!

64. ஓம் முன்றெழுத்தான முக்கண்ணியே போற்றி!

65. ஓம் நான்கெழுத்தான நாராயணியே போற்றி!

66. ஓம் ஐந்தெழுத்தான அம்பிகையே போற்றி!

67. ஓம் ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி!

68. ஓம் அகந்தையை அழிக்கும் அன்னையே போற்றி!

69. ஓம் குற்றம் பொறுக்கும் குணவதியே போற்றி!

70. ஓம் குருவாய் விளங்கும் கோலவிழியே போற்றி!

71. ஓம் சின்மயமாக சிரிப்பாய் போற்றி!

72. ஓம் தன் மயமாக தனித்தாய் போற்றி !

73.ஓம் வேதாந்த மால வித்தைகியே போற்றி!

74. ஓம் வேற்றுமையில்லா விமலியே போற்றி!

75. ஓம் நாற்பத்து முக்கோண நாயகியே போற்றி!

76. ஓம் அரணோடு அறியாய் அமர்ந்தாய் போற்றி!

77. ஓம் பரனோடு பறைவாய் இருப்பாய் போற்றி!

78. ஓம் மோன பாத்திரத்தின் முடிவே போற்றி!

79. ஓம் ஞானஷேத்திர வடிவே போற்றி!

80. ஓம் நடுநிலை ஆன நான்மறை போற்றி!

81. ஓம் கொடுவினை அகற்றும் குண்டலி போற்றி!

82. ஓம் சுத்த சிவத்தில் ஜொலிப்பாய் போற்றி!

83. ஓம் சக்தி சிவமாய் இருப்பாய் போற்றி!

84. ஓம் சுக சொரூப சூழ்ச்சியே போற்றி!

85. ஓம் அகண்ட பூரணி ஆனவள் போற்றி!

86. ஓம் மாலை திருமகள் வானீயே போற்றி!

87. ஓம் அன்னையே வடிவுடைய அம்மையே போற்றி!

88. ஓம் கன்னியாய் சிவகாம சுந்தரியே போற்றி!

89. ஓம் மாலை திருமகள் வடிவே போற்றி!

90. ஓம் ஆட்சியாய் நீலாய ஆட்சியே போற்றி!

91. ஓம் நாரணி பூரணி நாயகி போற்றி!

92. ஓம் ஆரணியாம் விசாலாட்சியே போற்றி!

93. ஓம் கன்னியாம் பத்ரகாளியே போற்றி!

94. ஓம் மண்ணும் துர்க்கை ஆனாய் போற்றி!

95. ஓம் ஏந்திர வித்தைகள் செய்பவள் போற்றி!

96. ஓம் மந்திர சொரூபினி மௌலியே போற்றி!

97. ஓம் மாய குண்டலி மகேஸ்வரியே போற்றி!

98. ஓம் ஆயிரம் நாமங்கள் கொண்டாய் போற்றி!

99. ஓம் ஆனந்த வடிவுடை நண்பனே போற்றி!

100. ஓம் மணவாக்கு கடந்த மாகாளியே போற்றி!

101. ஓம் சர்வ சம்ஹாரி சக்தியே போற்றி!

102. ஓம் என் உள்ளத்தின் உள்ளே இருப்பாய் போற்றி!

103. ஓம் மன்னுயிர் குயிராய் இருப்பாய் போற்றி!

104. ஓம் மகிமை மிகுகாஞ்சி காமாட்சியே போற்றி!

105. ஓம் கனகம் பொழிகின்ற காமகோட்டத்தே போற்றி!

106. ஓம் மனங்கவர் காயத்ரி மாமண்டபத்தே போற்றி!

107. ஓம் வெற்றி கம்பம் விளங்கும்மாலையத்தே போற்றி!

108.ஓம் வேதனை நீக்கும் வெக்காளி அம்மையே போற்றி!

காவல் தெய்வமான இவளை வணங்கினால் குழந்தைவரம் கிட்டும், திருமணம் கைகூடும். எந்த ஆபத்தும் நம்மை தீண்டாது அன்னை காப்பாள்.

நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன