பிச்சை, பிட்சையின் ரகசியம் தெரியுமா!?

நாம் புராணக்கதைகள், ஆன்மீக தகவல்களை கேட்க நேரும்போது பிட்சை எடுத்தல் பற்றி கேட்டிருப்போம். அதுவும், கோவிலில், தெருக்களில் எடுக்கும் பிச்சையும் ஒன்றான்னு கேள்வி எழும். பிச்சைக்கும் பிட்சைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. பிச்சை என்பது…

நாம் புராணக்கதைகள், ஆன்மீக தகவல்களை கேட்க நேரும்போது பிட்சை எடுத்தல் பற்றி கேட்டிருப்போம். அதுவும், கோவிலில், தெருக்களில் எடுக்கும் பிச்சையும் ஒன்றான்னு கேள்வி எழும்.

69f3f06870dd2b32c7577f7f7d065a7b

பிச்சைக்கும் பிட்சைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. பிச்சை என்பது சாப்பாடு, துணி, காசு என எதுக்கொடுத்தாலும் வாங்கிக்கொள்வது.

ஆனால், பிட்சை(பிக்ஷை) என்பது அரிசியை மட்டுமே பெறுவது.

விதிவசத்தால் காசு பணமின்றி, உணவுக்காகவும், சோம்பேறித்தனத்தால் உழைக்க மறுத்தவர் எடுப்பது பிச்சை. சுகமாய் வாழ வழியிருந்தும், சொத்து சுகங்களை உதறித்தள்ளி துறவுக்கோலம் பூண்டவர் எடுப்பது பிட்சை(பிக்ஷை).

பிச்சை இடுவது என்பது கருணையின் வெளிப்பாடு. ஆனால் பிட்சை (பிக்ஷை)இடுவது நமது கடமை. பிச்சை கேட்டு கொடுக்காமல் போனால் புண்ணியம் மட்டும் சேராமல் போகும். ஆனால் பாவம் நம்மை சேராது. ஆனால் பிட்சை (பிக்ஷை) இடாது போனால், பாவம் பின்தொடரும். ஏனென்றால், பிக்ஷை வாங்குபவர், நம்மிடம் இருந்து அரிசியை மட்டும் வாங்குவதில்லை. கூடவே சேர்த்து நமது பாவத்தையும் பெற்று செல்கிறார் என்பது ஐதீகம். எனவே முடிந்தால் பிச்சையிடுவோம். முடிந்தபோதெல்லாம், அதாவது பிட்சை கேட்கும்போதெல்லாம் பிட்சை இடுவோம்.

பிச்சை இடுங்கள் ,
பிட்சை(பிக்ஷை) கொடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன