சண்டிகேஸ்வரருக்கு காது கேட்காதா?!

சிவன் கோவிலுக்கு போய் சாமியை பார்த்துவிட்டு சண்டிகேஸ்வரர் முன் வந்து கைகளை தட்டுவதை பார்த்திருக்கிறோம். கேட்டால் அது செவிட்டு சாமின்னு சொல்வாங்க. ஆனால், அது காரணமில்லை. சண்டிகேஸ்வரர் ஒரு சிறந்த சிவ பக்தர். அவர்…

சிவன் கோவிலுக்கு போய் சாமியை பார்த்துவிட்டு சண்டிகேஸ்வரர் முன் வந்து கைகளை தட்டுவதை பார்த்திருக்கிறோம். கேட்டால் அது செவிட்டு சாமின்னு சொல்வாங்க. ஆனால், அது காரணமில்லை.

0c699c9180a0d860d644d4f42432816a

சண்டிகேஸ்வரர் ஒரு சிறந்த சிவ பக்தர். அவர் எப்போதும் சிவ சிந்தனையிலே தியானத்தில் இருப்பவர். சிவ நாமத்தையே உச்சரிப்பவர். அதுமட்டுமில்லாமல் சிவனோட வரவு செலவு கணக்குகளை பார்க்கும் குமாஸ்தாவும்கூட!! சதாசர்வக்காலமும் கணக்கு வழக்குகளை பார்ப்பதும், அதை சிவனோடு பகிர்ந்துப்பதுமாய் இருப்பார்.

சிவன் சொத்தை அபகரித்தால் குலமே நாசமாகும்ன்னு சொல்வாங்க. அதனால், நான் கோவிலிலிருந்து இறைவன் அருளும், பிரசாதம் தவிர்த்து எதும் கொண்டு போகலைன்னு அவருக்கு குறிப்பாய் உணர்த்தவே தங்கள் கைகளை மெல்ல விரித்து தடவி காட்டுவது வழக்கம். அதுவே இப்ப கை தட்டுவதும், சொடக்கு போடுவதுமாய் மாறிட்டுது. இப்படி செய்வதால் அவரின் வேலை பாதிப்பதோடு அவரின் யோகநிலையை கலைக்குற பாவத்தை செய்தவர்கள் ஆவோம்.

எந்த செயலையும் செய்யும்முன் காரணகாரியத்தை தெரிஞ்சு செய்யனும். இல்லன்னா பாவம் வந்து சேரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன