அரக்கிக்கும் மோட்சம் கொடுத்தவன், திருப்பாவை பாடலும் விளக்கமும் – 6

By Staff

Published:

81c135217d760be17baa2770ddc7b136-1-2

பாடல்..

புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு
கள்ளக் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி  என்ற பேர் அரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்து — ஏலோர் எம்பாவாய்.

பொருள்;

பறவைகள் கூவிவிட்டன. கருடனை வாகனமாகக்கொண்ட விஷ்ணுவின் கோவிலில் வெண்சங்கொலி பெரிய ஓசையிட்டு அழைப்பதைக் கேட்கவில்லையா? இளம்பெண்ணே! எழுந்திரு. பூதனா என்றும் அரக்கியின் நச்சுமுலையை உறிஞ்சி வஞ்சகமான சகடாசுரன் வண்டி உருவில் வந்தபோது கட்டுக்குலையும்படி காலால் உதைத்தான். பாற்கடலில் பாம்பின்மேல் துயில்கொண்டு, உயிர்களுக்கெல்லாம் வித்தானவனை முனிவர்களும் யோகிகளும் ஹரி ஹரி என்று கூறும் ஒலி எங்கள் உள்ளம் புகுந்து குளிர்ந்தது.

cc679cb682594b004ec7a7dc91123641

விளக்கம்: பூதகி என்ற அரக்கியை கிருஷ்ணனை கொல்ல கம்சன் அனுப்பி வைத்தான். அவளை இம்சை செய்து கண்ணன் கொன்றிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. அவனுக்கு பால் தந்து தாய் ஸ்தானத்தை அடைந்து விட்டாளே! அந்த தாய்மையைப் பாராட்டும் விதத்தில் அவளது மடியில் அமர்ந்து பாலைக் குடிப்பதுப்போல் அமைதியாக உயிரைக் குடித்து அவளுக்கு மோட்சமளித்தான் எம்பெருமான். கேரளாவில் அம்பலப்புழையில் இருந்து 25 கி.மீ., தூரத்திலுள்ள திருவமுண்டூர் என்ற தலம் குறித்து இந்தப் பாடலை ஆண்டாள் பாடினார்.

திருப்பாவை பாடலும் விளக்கமும் தொடரும்……

Leave a Comment