வள்ளிமலை முருகன் கோவில் புத்தாண்டு படி உற்சவ விழா

முருகன் வள்ளியை தேடி மணம் முடித்ததுதான் இந்த வள்ளிமலை.இங்குதான் முருகன் வேடுவ பெண் வள்ளியை கண்டாராம். பராசக்தியின் அம்சமான வள்ளி பிறந்த காடு என்பதால் இது புனித மலையாக போற்றப்படுகிறது. இந்த வள்ளிமலை வேலூரிலிருந்து…

முருகன் வள்ளியை தேடி மணம் முடித்ததுதான் இந்த வள்ளிமலை.இங்குதான் முருகன் வேடுவ பெண் வள்ளியை கண்டாராம்.

பராசக்தியின் அம்சமான வள்ளி பிறந்த காடு என்பதால் இது புனித மலையாக போற்றப்படுகிறது. இந்த வள்ளிமலை வேலூரிலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் என்ற அளவில்தான் வேலூரிலிருந்து பஸ் உள்ளது. வேலூர் நகரின் ரயில்வே ஜங்க்‌ஷனான காட்பாடியில் இறங்கினாலும் ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள பாலத்தில் உள்ள ஸ்டாப்பில் நின்றால் பஸ் வரும்.

cd98177b2fd73c2d1a46853d0e4bfab9

இந்த வள்ளிமலையில் முருகன் மலை மீது கோயில் கொண்டுள்ளார்.மலை மீது குகைக்குள் முருகனது கோயில் உள்ளது மிகவும் குளிர்ச்சியாக முருகன் இங்கு காட்சியளிக்கிறார்.

இந்த வள்ளிமலை முருகன் கோவிலை பெரிய அளவில் விழா எடுத்து பிரபலமாக்கியவர் இந்த கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்து இந்த மலையிலேயே நீண்ட காலம் வாழ்ந்து மறைந்த வள்ளிமலை சுவாமிகள். அவர்தான் இந்த மலை முருகன் கோவிலை உலகறிய செய்தார்.

அனைவரும் இந்த கோவில் வாழ்நாளில் ஒருமுறையேனும் சென்று வந்தால் சிறப்பு என வாரியார் சுவாமிகள் கூறியுள்ளார்.

இந்த மலை முருகன் கோவில் அடிவாரத்தில் இருந்து 800 படிகளுடன் உள்ளது. அனைத்து படிகளுக்கும் கற்பூரம் வைத்து தீபமேற்றி, வெற்றிலை பாக்கு தாம்பூலம் வைத்து வணங்கி செல்வதுதான் படி பூஜை. வணங்கி சென்று பின்பு மேல் ஏறி மலையை சுற்றி கிரிவலம் வந்து முருகனை வணங்குவது மரபு.

இன்று பெரும்பாலான முருகன் கோவில்களில் படி பூஜை செய்யப்பட்டாலும் இங்கு செய்யப்படும் பூஜையே பிரதானமாகும்.

தமிழ்ப்புத்தாண்டுக்கு முதல் நாள் வருடா வருடம் இங்கு சிறப்பாக இந்த படி பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜையை மக்களிடத்தில் பிரபலப்படுத்தியவர் மறைந்த வள்ளிமலை சுவாமிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ஜீவசமாதியும் இந்த மலை மேல் உள்ளது.அடிவாரத்திலேயே வள்ளிக்கு தனி சன்னதி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன