சதுர்த்தி திதியான இன்று சொல்லக்கூடிய வினாயகப்பெருமானின் 108 போற்றி….- தினம் ஒரு மந்திரம்

1. ஓம் அத்தி முகனே போற்றி  2. ஓம் அம்பிகைச் செல்வா போற்றி  3. ஓம் அம்மையே அப்பா போற்றி  4. ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி  5. ஓம் அமரர்கள்  கோனே போற்றி …


1. ஓம் அத்தி முகனே போற்றி 

2. ஓம் அம்பிகைச் செல்வா போற்றி 

3. ஓம் அம்மையே அப்பா போற்றி

 4. ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி 

5. ஓம் அமரர்கள்  கோனே போற்றி 

6. ஓம் அடியார்க்கு இனியோய் போற்றி

 7. ஓம் அங்குச பாஸா போற்றி

 8. ஓம் அரு உருவானாய் போற்றி 

9. ஓம் ஆறுமுகன் அண்ணா போற்றி 

10. ஓம் அணுவினுக்கு அணுவே போற்றி 

11. ஓம் அண்டங்கள் ஆனாய் போற்றி 

12. ஓம் அவல்,பொரி,அப்பம் ,அருந்துவோய் போற்றி 

13. ஓம் பிட்டும், முப்பழமும் நுகர்வாய் போற்றி

 14. ஓம் ஆதி மூலமே போற்றி 

15. ஓம் ஆருயிர்க்குயிரே போற்றி 

16. ஓம் ஆரா அமுதா போற்றி

 17. ஓம் இருள் தனைக் கடிவாய் போற்றி 

18. ஓம் இடையூறு களைவாய் போற்றி 

19. ஓம் இன்பத்தின் பெருக்கே போற்றி 

20. ஓம் இருவினை அறுப்பாய் போற்றி

21. ஓம் ஈசனார் மகனே போற்றி

 22. ஓம் ஈரேழாம் உலகா போற்றி 

23. ஓம் உத்தமக் குணாளா போற்றி 

24. ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி 

25. ஓம் உண்மை நெறியாளா போற்றி 

26. ஓம் உம்பர்கள் தொழுவாய் போற்றி 

27. ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி

 28. ஓம் எங்குமே நிறைவாய் போற்றி 

29. ஓம் என்றுமே  திகழ்வாய் போற்றி 

30. ஓம் எங்குமே அமர்ந்தாய் போற்றி 

31. ஓம் எவர்க்குமே அருள்வாய் போற்றி 

32. ஓம் எதையுமே முடிப்பாய் போற்றி

 33. ஓம் எண்குண சீலா போற்றி 

34. ஓம் எழு பிறப்பறுப்பாய்  போற்றி

 35. ஓம் ஏழைப் பங்காளா போற்றி

 36. ஓம் ஏக நாயகனே போற்றி 

37. ஓம் எழில் மிகு தேவே போற்றி

 38. ஓம் ஔவையார்க் கருள்வாய் போற்றி 

39. ஓம் ஐங்கர முடையாய் போற்றி

 40. ஓம் ஐம்புலன் அடக்குவாய் போற்றி 

41. ஓம் நான்கு நற் புயத்தாய் போற்றி 

42. ஓம் நாவலர் பணிவாய் போற்றி

 43. ஓம் முக்கண்கள் உடையாய் போற்றி 

44. ஓம் முழு முதற் பொருளே போற்றி

 45. ஓம் ஒளி மிகு தேவே  போற்றி

 46. ஓம் ஓங்கார மூர்த்தி போற்றி 

47. ஓம் கணத்து நாயகனே போற்றி

 48 . ஓம் கருணையார் மூர்த்தியே போற்றி

 49. ஓம் கலைஞானக் குருவே போற்றி 

50. ஓம் கயமுகனைக் காய்ந்தாய் போற்றி 

51. ஓம் கற்பக களிறே போற்றி 

52. ஓம் கண்கண்ட தேவே போற்றி 

53. ஓம் கந்தனை வென்றாய் போற்றி

 54. ஓம் கனிதனைப் பெற்றாய் போற்றி 

55. ஓம் சங்கத்துத் தமிழே போற்றி

 56. ஓம் சரவணன் தொழுவாய் போற்றி 

57. ஓம் சர்வ லோகேசா போற்றி 

58. ஓம் சாந்தமார் மூர்த்தி போற்றி 

59. ஓம் சுருதியின் முடிவே போற்றி 

60. ஓம் சொற்பதம் கடந்தாய் போற்றி 

61. ஓம் நம்பிக்கு அருள்வாய் போற்றி 

62. ஓம் நாதனே ,கீதா போற்றி 

63. ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி

 64. ஓம் தாயினும் நல்லாய் போற்றி 

65. ஓம் தரும குணாளா போற்றி 

66. ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி 

67. ஓம் தூயவர் துணைவா போற்றி 

68. ஓம் துறவிகள் பொருளே போற்றி

 69. ஓம் நித்தனே ,நிமலா போற்றி 

70. ஓம் நீதி சால் துரையே போற்றி 

71. ஒம் நீல மேனியனே போற்றி 

72. ஓம் நிர்மலி வேனியா போற்றி 

73. ஓம் பேழை நல் வயிற்றாய் போற்றி 

74. ஓம் பெரிச்சாளி வாகனா போற்றி

 75. ஓம் பாரதம் வரைந்தாய் போற்றி

 76. ஓம் பாவலர் பணிவாய் போற்றி

 77. ஓம் பாசத்தை அறுப்பாய் போற்றி 

78 . ஓம் பாவப்பிணி ஒழிப்பாய் போற்றி 

79. ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி 

80. ஓம் முத்தியை தருவாய் போற்றி 

81. ஓம் வேழ முகத்தாய் போற்றி 

82. ஓம் வேட்கையை தணிவிப்பாய் போற்றி

 83. ஓம் வேள்வியின் முதல்வா போற்றி 

84. ஓம் வேதாந்த விமலா போற்றி 

85. ஓம் ஒழுக்கமது அருள்வாய் போற்றி 

86. ஓம் உடல் நலம் தருவாய் போற்றி 

87. ஓம் செல்வம் தருவாய் போற்றி 

88. ஓம் செறுக்கினை அழிப்பாய் போற்றி 

89. ஓம் சிந்தனையை அடக்குவாய் போற்றி 

90. ஓம் சினம் ,காமம் ,தவிர்ப்பாய் போற்றி 

91. ஓம் கல்வியை அருள்வாய் போற்றி 

92. ஓம் கரத்தலை ஒழிப்பாய் போற்றி 

93. ஓம் ஒளவியம்  அகற்றுவாய் போற்றி

 94. ஓம் அறநெறி புகட்டுவாய் போற்றி 

95. ஓம் அவாவினை அடக்குவாய் போற்றி 

96. ஓம் அன்பினை வளர்ப்பாய் போற்றி 

97. ஓம் ஊக்கமது அருள்வாய் போற்றி 

98. ஓம் அமிர்த கணேசா போற்றி 

99. ஓம் ஆக்கம் பெருக்குவாய் போற்றி 

100. ஓம் வலம்புரி விநாயகா  போற்றி

101. ஓம் வரமெல்லாம் தருவாய் போற்றி 

102. ஓம் சித்தி விநாயகா போற்றி 

101. ஓம் சிவபதம் அருள்வாய் போற்றி 

104. ஓம் சுந்தர  விநாயகா போற்றி 

105. ஓம் சுக போகம் தருவாய் போற்றி

 106. ஓம் அனைத்து ஆனாய் போற்றி 

107. ஓம் ஆபத் சகாயா போற்றி 

108. ஓம் அமிர்த கணேசா போற்றி.

கணபதி வழிபாடு மிக எளிமையானது. கல், மண், மஞ்சள், சானம், செம்பு ஆகியற்றில் பிள்ளையார் பிடிக்க வேண்டும் என்பது விதி. முழுமுதற்கடவுளாம் வினாயகரை நாம் தேடிச்சென்று வழிபடவேண்டும் என்பதில்லை. போகும் வழியிலேயே கோவில் அல்லது அரச மர நிழலில் நமக்காக வீற்றிருப்பார். தினமும் கணபதியை வணங்க இயலாதவர்கள் வெள்ளி மற்றும் சதுர்த்தி திதிகளில் வழிபடலாம். இன்றைய தினம் சதுர்த்தி திதி. வினாயகர் வழிபாட்டுக்கு உகந்தது. உங்களால் இயன்றபோது முழுமுதல் கடவுளை நினைத்து 108 துதிகளை சொல்லி வழிபட்டு எல்லா வளமும் பெறுவோம்.

நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன