மனித உடலும், சிங்க முகமுமாய் நரசிம்மர் அவதரிக்க என்ன காரணம் ?! – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்

மனிதனுமல்லாத மிருகமுமல்லாத உயிரினத்தால், உள்ளேயுமல்லாமல், வெளியேயுமல்லாத இடத்தில், ஆகாயமுமல்லாத பூமியுமில்லாத வெளியில், இரவுமில்லாத பகலுமல்லாத வேளையில், எந்தவித ஆயுதத்தாலின்றி ஒரு சொட்டு ரத்தமும் கீழே சிந்தாத வகையில் தனக்கு மரணம் நிகழவேண்டுமென சிவனிடம் வரம்பெற்று…


மனிதனுமல்லாத மிருகமுமல்லாத உயிரினத்தால், உள்ளேயுமல்லாமல், வெளியேயுமல்லாத இடத்தில், ஆகாயமுமல்லாத பூமியுமில்லாத வெளியில், இரவுமில்லாத பகலுமல்லாத வேளையில், எந்தவித ஆயுதத்தாலின்றி ஒரு சொட்டு ரத்தமும் கீழே சிந்தாத வகையில் தனக்கு மரணம் நிகழவேண்டுமென சிவனிடம் வரம்பெற்று அரண்மனைக்கு திரும்பி, அனைவரும் தன்னையே கடவுளாய் வணங்கவேண்டுமென கட்டளையிட்டான். மீறியவர்களை கடுமையாய் துன்புறுத்தவும் செய்தான். 

வருடங்கள் கடந்தன.  பிரகலாதன் அசுரக்குலத்தில் பிறந்தாலும் ஓம் நமோ நாராயணாய என்று  எட்டெழுத்து மந்திரத்தை எப்போதும் ஜெபித்துக் கொண்டிருந்தான். இதனைக்கண்ட   இரணியன், அந்தப் பெயரை உச்சரிக்காதே. இந்த உலகங்கள் அனைத்திற்கும் நானே அதிபதி. என் பெயரைச் சொல். இரண்யாய நமஹ என்று சொல் என்று  கட்டாயப்படுத்தினான். ஆனால் பிரகலாதனோ மகா விஷ்ணுவே தெய்வம் என்பதில் உறுதியாக இருந்தான். எத்தகைய  அச்சுறுத்தலுக்கும் தண்டனைக்கும் அவன்  அஞ்சவில்லை. வெறுத்துப்போன இரணியன் தன் தங்கை ஹோலிகாவை அழைத்து, இவனை நெருப்பு வளையத்திற்குள் அழைத்துச் சென்று பஸ்பமாக்கிவிடு  என்று உத்தரவிட்டான்.இந்த ஹோலிகா நெருப்பால் பாதிக்கப்படாத வரம் பெற்றவள். அவள் அண்ணன் சொல்படி பயங்கரமாக எரிந்து கொண்டிருந்த நெருப்பு வளையத்திற்குள்  பிரகலாதனை அழைத்துச் சென்றாள். அப்போதும் பிரகலாதன் கைகளைக் கூப்பிக் கொண்டு ‘ஓம் நமோ நாராயணாய’ என்று ஜெபித்துக் கொண்டே சென்றான். ஆனால்,  தீய  எண்ணத்துடன் நெருப்பு வளையத்திற்குள் நுழைந்த ஹோலிகா பஸ்பமானாள். நாராயணன் திருநாமத்தை ஜெபித்துக்கொண்டே சென்ற பிரகலாதன் பொலிவுடன் வெளிவந்தான்.  இரணியனின் கோபம் எல்லை கடந்தது. அவன் பிரகலாதனிடம், உன் நாராயணன் எங்கே? அவனைக் காட்டு என பிரகலனாதனை கண்டித்தான்.  ஸ்ரீமன் நாராயணன் தூணிலும்  துரும்பிலும் உள்ளான் என பிரகலனாதன் சொன்னதும், ஆக்ரோஷமாய் அருகிலிருந்த தூணில் பலம்கொண்டு தன்கதையால்  தாக்கினான். 

f0fac9b551aff883749292b48bff7e78

இரண்யகசிபுவுக்கும் பிரகலனாதனுக்கும் வாக்குவாதம் நடந்தது பிரதோஷ காலம் முடியும் நேரம். இரவும் பகலும் இல்லாத வேளை.  மனிதனுமில்லாத, மிருகமுமில்லாத மனித உடலும், சிங்கமுகமாக நரசிம்மராக அந்தத் தூணிலிருந்து வெளிவந்தார். இரணியன் பெற்ற வரத்தினை அறிந்த  நரசிம்மர் அந்தப் பிரதோஷ வேளையில் அறைக்கு உள்ளேயும் வெளியேயும் இல்லாமல் வாசல்படியில்,  ஆகாயத்திலும் பூமியிலும் இல்லாமல் தம் மடியின்மீது படுக்கவைத்து, ஆயுதத்தால்  கொல்லாமல் தன் கூர்மையான கைகளின் நகங்களால், அவன் மார்பினைப் பிளந்து,   ரத்தத்துளிகள் கீழே சிந்தாதவாறு ரத்தத்தினை உறிஞ்சி, குடலை உருவி மாலையாகப் போட்டுக்கொண்டு இரணியனை சம்ஹாரம் செய்தார்.
இரண்யகசிபு வதம் முடிந்தும் தன் ஆக்ரோஷம் குறையாமலிருந்த நரசிம்மரை நெருங்க அனைவரும் பயந்திருந்த வேளையில், பிரகலாதன் நெருங்கி, பாடல்பாடி அவரின் ஆக்ரோஷம் தனித்தான். தன் எதிரே சிங்கமுகத்துடனும் மனித உடலுடனும் காட்சிதந்த நரசிம்மமூர்த்தியை கைகூப்பி வணங்கினான். அப்போது, அவனுக்கு தன் முற்பிறவி நினைவுக்கு வந்தது. பகவானே, கடந்த பிறவியில் நான்  வேண்டிக்கொண்டதன் பயனால் இப்பிறவியில் எனக்காக நரசிம்ம அவதாரம் எடுத்து  அருள்புரிந்தீர் என்று தாள்பணிந்தான்  பிரகலாதன்.

e9295459f08160d6888518fba74f28d7

கருணைக்கடலான நரசிம்ம மூர்த்தி பிரகலநாதனை தன் மடியில் இருத்தி,   ”நீ ஏன் தூணைக் காட்டினாய், துரும்பைக் காட்டியிருக்கக் கூடாதா? என்று பிரகலநாதனிடம் கேட்க,  ”ஏன் இப்படி கேட்கிறீர்கள்? என்று பிரகலாதன் கேட்க, தூண்  என்பதால், இரணியன் அதை உடைக்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. துரும்பு என்றால் அதைக் கிள்ளியெறிந்தவுடன் பிரசன்னமாகி இருப்பேனே!  இவ்வளவு நேரம் கடந்திருக்காதில்லையா?! நீயும் அவஸ்தை பட்டிருக்க மாட்டயல்லவா?! என்றாராம். ஆம்!  நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை. அவரிடம்  வைக்கும் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறும்.  கேட்ட வரத்தை கேட்ட மாத்திரத்திலேயே அளிக்க வல்லவன் இந்த நரசிம்மர்.

கேட்ட வரத்தை கொடுக்கும் நரசிம்மர் அவதரித்த தினமான புதன்கிழமை (6/5/2020) நாளை நரசிம்ம ஜெயந்தி என பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன