நரசிம்ம ஜெயந்தி வழிபாட்டுக்குண்டான நேரம் எதுவென தெரியுமா?!

நரசிம்மர் விரத வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்திசாயும் வேளையான மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை. இன்று புதன்கிழமை (6/5/2020)நரசிம்ம ஜெயந்தி, சித்திரை மாதவளர்பிறை சதுர்த்தசி திதியில்  நரசிம்ம ஜெயந்தி வரும். இன்றைய தினம்…

நரசிம்மர் விரத வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்திசாயும் வேளையான மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை. இன்று புதன்கிழமை (6/5/2020)நரசிம்ம ஜெயந்தி, சித்திரை மாதவளர்பிறை சதுர்த்தசி திதியில்  நரசிம்ம ஜெயந்தி வரும். இன்றைய தினம் விரதமிருந்து சரியான நேரத்தில் நரசிம்மரை வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். 

நரசிம்ம மூல மந்திரம்..

‘ஓம் வஜ்ரநாகாய வித்மஹே

தீட்சண தன்ஷ்ட்ராய தீமஹி

தந்நோ நரஸிம்ஹாய ப்ரசோதயாத்’

நரசிம்ம ஜெயந்தியான் இன்று காலை கண்விழித்து, சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி நரசிம்மரை மனதார நினைத்து, வழிபட்டால் தீர்க்கமுடியாத கஷ்டங்களும் தீரும் என்று சொல்கிறது சாஸ்திரம். குறிப்பாக இந்த தினத்தில் நரசிம்மரை வழிபடும்போது, மன தைரியம் அதிகரிக்கும். உடலில் இருக்கும் நோய் நொடிகள் நீங்கும். எதிரிகள் தொல்லை முற்றிலுமாக நீங்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். இப்படி மனிதர்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை உடனடியாக போக்கும் சக்தி இந்த நரசிம்ம அவதாரத்தில் உண்டு என்று சொன்னால் அது நிச்சயம் பொய்யாகாது.

எதிரி பயம் நீங்க, இனம்புரியா அச்சம், குழப்பம் விலக, ராஜ வாழ்க்கை கிட்ட, தொழிலில் தடை விலக இன்று மாலை 4.30 முதல் 7.30வரை நரசிம்மரை வழிபடுவோம்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன