ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பானபுரீஸ்வரர், அமிர்த கலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், நாகேஸ்வரர், காளகஸ்தீஸ்வரர், சோமேஸ்வரர் என சைவக்கடவுளர்களும், ராமசாமி, ராஜகோபாலசுவாமி, சாரங்கபாணி, சக்கரபாணி, ஆதிவராகபெருமாள் போன்ற வைணவ கடவுளர்கள் உட்பட ஏராளமான தெய்வங்கள் ஒருசேர அருள்பாலிக்கும் இடம்தான் கும்பகோணம் .
தினமும் ஏதாவது ஆன்மீக நிகழ்வுகள் நிகழ்ந்துக்கொண்டேதான் இருக்கும். அதிலும் மாசி மாதத்தில் வரும் மாசி மகம்தான் பிரசித்திப்பெற்றது. மாசிமக பெரு விழாவானது, இந்த ஆண்டு, கும்பகோணத்தில் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவிலில் இன்று (28/2/2020) கொடியேற்றத்துடன் கோலாகலமாய் தொடங்கியது. மேலும், இன்று இரவு, ஆதி கும்பேஸ்வரர் இந்திர வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும். நாளை சனிக்கிழமையன்று (29/2/2020)-ம் கமல வாகனத்திலும், மார்ச் 1(ஞாயிற்றுக்கிழமை) தேதியன்று பூத வாகனத்திலும், கிளி வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைப்பெற இருக்கின்றது. மேலும், மாசி மக பெருவிழாவிற்காக தினமும் சுவாமி புறப்பாடு வைபவமானது நடைபெற இருக்கின்றது,
பக்தர்கள் கலந்துக்கொண்டு இறைவனின் அருளைப்பெற வேண்டுகிறோம்.