குழந்தைத்தனம் மாறி சக்தியின் வடிவமாக முழுமைப் பெறும் வடிவம்தான் பாலாதிரிபுரசுந்தரி அனைத்து கஷ்டங்களையும் தீர்க்கும் மிக பெரிய சக்தி அவள். சித்தர்கள் தலைவியாகிய வாலை என்கிற ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி குழந்தை வடிவானவள். ஸ்ரீசக்கர வடிவிலானவள். பக்தியையும், ஞானத்தையும், அறிவையும் வழங்கக்கூடியவள்.
ஐம் க்லீம் சௌ. சௌ க்லீம் ஐம், ஐம் க்லீம் சௌ.. அம்மா சரணம் தேவி சரணம் சக்தி சரணம். ஶ்ரீ பாலா திரிபுர சுந்தரி தேவி சரணம்
ஓம் |ஐம்|க்லீம்|சௌம்|இதில் சௌம் என்பதை “சௌஹூம் “என சொன்னால் பலன் அதிகம் கிடைக்கும்.
ஐம் – வாக்பீஜம் எனப்படுகிறது. பிரம்மா.சரஸ்வதி இவர்களின் அம்சமே இந்த ஜம். நல்ல பேச்சாற்றல்,வாக்குபலிதம்,ஞானம்,அறிவு இவற்றைத் தரும்.
க்லீம் – காமராஜபீஜம் எனப்படும். இதில் விஷ்ணு, லக்ஷ்மி, காளி,மன்மதன் இவர்கள் அடக்கம்.இம்மந்திரம் நல்லசெல்வம்,செல்வாக்கு,கௌரவம்,வசீகரசக்தி,உடல்,மன பலம் இவற்றை தரும்.
சௌஹூம் – இப்பீஜத்தில் சிவன்,பார்வதி,முருகன் இவர்கள் அடக்கம்.சௌம் என்ற பீஜத்தில்இருந்தே சௌபாக்கியம் என்ற வார்த்தைதோன்றியதாக வேதம் கூறுகிறது.இப்பீஜம்சௌபாக்கியம் நிறைந்த வளவாழ்வினைத்தரும்.
குருவின் வழிகாட்டுதலோடு இறை சிந்தனையோடும், தூய மனதோடும் நல்ல நோக்கத்தோடும் இம்மந்திரத்தினை சொன்னால் நற்பலன்கள் கிட்டும்.