மனதிற்கு பிடித்தவரையே மணமுடிக்கனுமா?!

மனிதனாய் பிறந்தோருக்கு படிப்பு, பதவி, பணம் என அத்தனை சிறப்பம்சம் இருந்தாலும் வாழ்க்கை துணை சரியாய் அமையவில்லையென்றால் அத்தனைக்கும் பலனில்லாமல் போகும். நல்ல குணம் குணம் கொண்ட கணவன்/மனைவி கிடைத்துவிட்டால் போதும். நிம்மதியாய் வாழலாம்.…

மனிதனாய் பிறந்தோருக்கு படிப்பு, பதவி, பணம் என அத்தனை சிறப்பம்சம் இருந்தாலும் வாழ்க்கை துணை சரியாய் அமையவில்லையென்றால் அத்தனைக்கும் பலனில்லாமல் போகும். நல்ல குணம் குணம் கொண்ட கணவன்/மனைவி கிடைத்துவிட்டால் போதும். நிம்மதியாய் வாழலாம். நல்ல குணநலனோடு கிடைக்கும் வாழ்க்கை துணை மனதிற்கு பிடித்துவிட்டால் மகிழ்ச்சிக்கு குறைவேது?! நம் விருப்பத்திற்கேற்றார்போல் வாழ்க்கைத்துணை அமைய கீழ்க்காணும் மந்திரத்தினை சொல்லலாம்.

f23ff7e6f0939b02f11427c7e2b36ae4

மகாலட்சுமி மந்திரம்:

ஓம் ஸ்ரீம் க்லீம் கமல தாரிண்யை

மஹா லஷ்ம்யை ஸ்வாகா:

இந்த மந்திரத்தை வெள்ளிக்கிழமைதோறும் காலை 6 மணியளவில் மகாலட்சுமியின் படத்தின்முன் விளக்கேற்றி வைத்து, ஒரு மரப் பலகையின் மீது அமர்ந்து இந்த மந்திரத்தினை மனமுருகி சொல்லவேண்டும். பெண்ணாக இருந்தால் சிறிதளவு மஞ்சள் தூளை புதியதாக வாங்கி வைத்துக்கொண்டு, 1008 முறை இந்த மந்திரத்தை ஜெபிக்கும்போது மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்யவேண்டும். மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன்பாக ஒரு சிறிய தாம்பூலத்தை வைத்துவிடுங்கள். ஒவ்வொரு முறை மந்திரத்தை உச்சரிக்கும் போதும் அந்த மஞ்ச தூளில் ஒரு சிட்டிகை மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்வது போல அந்த தட்டில் போடவும். இப்படி வாரம் தோறும் இந்த மந்திரத்தை மகாலட்சுமிக்கு உச்சரித்து வரலாம். அந்த மஞ்சளை எடுத்து முகத்தில் தேய்த்து குளிக்க பயன்படுத்திக் கொள்வது சிறந்தது.

7d6f2b57f68c3bf6d1071e70d5049b39

ஆண்களாக இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறையில் தான் மகாலட்சுமியின் முன்பு இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மஞ்சளால் அர்ச்சனை செய்ய வேண்டாம். மஞ்சளுக்கு பதிலாய் பூக்களை வாங்கி வைத்துக்கொள்ளலாம். ஆண்கள் வியாழக்கிழமை அன்று மகாலட்சுமிக்கு பிடித்தமான 5 ஏலக்காய், மஞ்சள் நிற ஆடை இவை இரண்டையும் ஒரு ஏழைப் பெண்ணுக்கு தானமாக வழங்குவது சிறந்த பலனைத் தரும். பெண்களும் இந்த தானத்தை செய்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஐந்து வியாழக்கிழமை இந்த தானத்தை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் இருக்கும். மகாலட்சுமியின் மந்திரத்தை குறிப்பிட்ட வாரம் தான் உச்சரிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. திருமணம் நடக்கும் வரை இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வரலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன