மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை அவன் கூடவே அன்லிமிட்டெட் ஆக வருவது துன்பங்கள்தான் ஏன் தான் பிறந்தோம் என சொல்லும் அளவுக்கு பலர் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த பிறவியில் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், ஒரு சிலர் கடந்த கால கடுமையான கர்ம வினையால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் கடும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.
வினையை தீர்த்து வைப்பது என்றால் மேஜிக் போல உங்கள் வினைகள் அனைத்தும் போய் விடாது.
வினைகளில் இருந்து உங்களை மீட்டுக்கொள்ளும் வழியை உங்களை அறியாமலேயே அவர் காட்டுவார். கர்ம வினைகளில் இருந்து உடனடியாக விலக்கு அளிக்கும் வழியை காண்பிப்பார் அவர்.
இப்படி தீராத வினைகளையும் தீர்த்து வைக்கும் ஒரு கோவில்தான் இந்த சார பரமேஸ்வரர் கோவில்.
இது கும்பகோணம் அருகில் திருச்சேறை என்ற இடத்தில் உள்ளது. இங்குதான் இந்த கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு நாம் 11 திங்கட்கிழமைகளில் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் முடியவில்லை வயதானவர் மிக தூரத்தில் இருந்து செல்கிறோம் என்றால் 11 வாரத்துக்கு அர்ச்சனைக்கு உரிய தொகையை கொடுத்து விட்டால் 11 வார பிரசாதமும் வீடு வந்து சேரும். நாம் 11வது வாரம் மீண்டும் கலந்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது.
இந்த ஆலய இறைவன் பெயர் இறைவன் பெயர் சாரபரமேஸ்வரர். செந்நெறியப்பர், உடையவர் என்பன இறைவனின் பிற பெயர்கள். இறைவியின் பெயர் ஞானாம்பிகை. தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95-வது தலமாக விளங்குகிறது திருச்சேறை.
மகாபாரதத்தில் வரும் கதையான எரியும் அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்கள் வெளியேற யுத்திகள் கூறிய குந்திதேவிக்கு உபதேசம் செய்தவருமான தவுமிய மகரிஷி இத்தலத்தில் மோட்சம் பெற்றதாக வரலாறு உள்ளது.
இத்தலத்தில்தான் பரிகார தெய்வமாக ‘ரிண விமோசன லிங்ககேஸ்வரர்’ இருக்கிறார் இங்குதான் மார்க்கண்டேய முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார்
மார்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அவரின் ஆத்மார்த்த லிங்கமே ரிண விமோசன லிங்கேஸ்வரர்.
மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் பிறவிக்கடனும், இப்பிறவி காலத்தில் பொருள் கடனுமாக இரண்டு கடன்கள் உண்டு. இங்குள்ள ரிண விமோசன லிங்கேஸ்வரரை தொடர்ந்து வழிபட்டால், இந்த இரண்டு கடன்களிலிருந்து விடுபடலாம்.
எனவே இவர் கடன் நிவர்த்தீஸ்வரர் என போற்றப்படுகிறார். தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்து, 11-வது வார முடிவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.
அதே போல் இங்குள்ள பைரவர் ஸ்வாமியை தொடர்ந்து எட்டு அஷ்டமி திதியில் அர்ச்சனை செய்து வழிபட்டு, ஒன்பதாவது அஷ்டமி திதி அன்று பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபட்டால் வேண்டியது நிறைவேறும். சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனியால் அவதிப்படுவோர் இவரை வணங்கலாம்
மிகவும் அருமையான இக்கோவிலுக்கு சென்று வாருங்கள் வாழ்வில் வளம் பெறுங்கள்.
கும்பகோணத்தில் இருந்து இக்கோவிலுக்கு பேருந்து வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.