நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.. இந்த மாதிரியான பொன்மொழிகள் நமது உடலின் ஆரோக்கியத்தின் அவசியத்தினை எடுத்து சொல்கின்றது. நமது உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் எல்லா வேலைகளையும் திறம்படச் செய்யமுடியும். இல்லையென்றால் இன்னொருவர் தயவினை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியமாய் இருந்தால் மூளையும் திறம்பட வேலை செய்யும். அதனால், உடல் ஆரோக்கியமா இருத்தல் மிக அவசியம்.
நோயிலிருந்து நம்மைக் காத்தருளும் கண்கண்ட தெய்வம் தன்வந்திரி பகவான். எனவே தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்லி மனதார வழிபட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாய் இருக்கும்.
தன்வந்திரி பகவான் மூல மந்திரம்..
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்தரேயே அம்ருதகலச ஹஸ்தாய
சர்வாமய நாசாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீமகாவிஷ்ணவே நம:
கல்விக்கு சரஸ்வதி,செல்வத்துக்கு லட்சுமி, வீரத்திற்கு பராசக்திப்போல தன்வந்திரி பகவான்தான் மருத்துவதிற்கான கடவுளாகும். அவரை வணங்கி உடல், மன ஆரோக்கியத்தோடு வாழ்வோம்.