பவளமலை முருகன் கோவில்

நேற்று ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிப்பாளையம் அருகே அமைந்துள்ள பச்சைமலை முருகனை பற்றி முருகனை பார்த்தோம் அதன் அருகிலேயே பவளமலை முருகன் கோவில் உள்ளது. இந்த பெயரிலேயே இக்கோவில் அருகருகே பச்சைமலை பவளமலை என்றே அழைக்கப்படுகிறது.…

நேற்று ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிப்பாளையம் அருகே அமைந்துள்ள பச்சைமலை முருகனை பற்றி முருகனை பார்த்தோம் அதன் அருகிலேயே பவளமலை முருகன் கோவில் உள்ளது. இந்த பெயரிலேயே இக்கோவில் அருகருகே பச்சைமலை பவளமலை என்றே அழைக்கப்படுகிறது.

bf2691d831f0ca31506c0640f7bb356a

நேற்று பச்சைமலையை பற்றி பார்த்தோம். இன்று அருகில் இருக்கும் பவளமலை முருகனை பற்றி பார்க்கலாம்.

இந்த கோவிலும் பச்சைமலையில் முருகக்கடவுளை வைத்து வழிபாடு செய்த துர்வாச முனிவரால் உருவான கோவில் என்றே சொல்லப்படுகிறது.

காற்றின் போக்கை தாங்க முடியாமல் மேரு மலையின் சில பாகங்கள் மலையை விட்டு பறந்து விழுந்தன. அதில் ஒரு துளி விழுந்த இடம்தான் பவளமலை என அழைக்கப்படுகிறது.

சிவபெருமான் இந்த கோவிலில் குடியிருந்து அவரை நாடி வரும் மக்களுக்கு நல்லாசி வழங்குகிறார். இந்த லிங்கமானது, அருகில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் உழவுப்பணி செய்யும்போது சுயம்புவாக தோன்றியதுயதாம்

பவளமலை கோவிலில் சிவபெருமானுக்கு ஈடாக முருகபெருமானும் இருக்கிறார் இவருக்கு திரிசத அர்ச்சனை செய்து வழிபடுவது நல்ல முன்னேற்றத்தை தரும்.

திரி என்றால் மூன்று, சதம் என்றால் நூறு. திரிசதம் என்பது முந்நூறு. அதாவது முருக பெருமானுக்கு செய்யப்படும் புகழ்மிக்க அர்ச்சனை இது. ஆறுமுகக்கடவுள் என்று போற்றப்படும் முருகன், பன்னிரு கைகள், ஆறு முகத்துடன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று சிவபெருமானை போன்று ஐந்தொழில்களையும் மேற்கொள்பவராக இருக்கிறார். அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவரது ஒரு முகத்துக்கு 50 அர்ச்சனைகள் வீதம், ஆறு முகங்களுக்கும் சேர்த்து 300 அர்ச்சனைகள் செய்வதே திரிசத அர்ச்சனை.

சூரபத்மனை வதம் செய்து இந்திரலோகத்து தேவர்களை எல்லாம் முருக கடவுள் மீட்டார். எனவே அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் தேவர்களின் அரசன் இந்திரன் தலைமையில் தேவர்களால் செய்யப்பட்ட அர்ச்சனையே திரிசத அர்ச்சனை. ஆகும்

கோபிசெட்டிப்பாளையம் சென்றால் பச்சைமலையானையும் பவளமலையானையும் தரிசிக்க மறக்காதீர்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன