இன்று ஆன்மிக பெருவிழாக்களில் ஒன்றான மாதம் இரண்டு முறை சிவனுக்காக வழிபடப்படும் பிரதோஷ விழாவாகும். சிவபெருமானுக்கும் நந்திக்கும் அனைத்து அபிசேக ஆராதனைகளும் நடைபெறும் ஒரு விழா இது.
இந்த பிரதோஷ காலத்தில் சிவனையும் பிரதோஷ நந்தியையும் தரிசித்தால் மிக சிறப்பான வாழ்க்கையை நாம் அடையலாம். தொடர்ந்து அனைத்து பிரதோஷங்களிலும் நாம் கலந்து கொள்ள வேண்டும் அது நடைமுறையில் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரிகள் செல்வோர், வியாபார ஸ்தலங்களில் வேலை பார்ப்போர் சிறந்த சிவபக்தர்களாக இருந்தாலும் அவர் மனம் பிரதோஷ பூஜையை நாடினாலும் எல்லா பூஜைகளிலும் இவர்கள் கலந்து கொள்ள முடியவில்லை.
அப்படிப்பட்டவர்களுக்காகவே வருடத்தில் அபூர்வமாக ஓரிரு முறை சனிப்பிரதோஷம் வருகிறது. இந்த சனிப்பிரதோஷம் இன்று வருகிறது.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை 13ஆம் நாள் திரயோதசி திதி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலமே பிரதோஷ காலம் எனப்படுகிறது.
அன்றுதான் ஈசன் விஷம் உண்ட மயக்கம் தெளிந்து அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷத்தில் 20 வகை உள்ளதாகவும் புராணங்கள் கூறுகிறது.
புராணம் கூறுவது படி ஆலகால விஷத்தை சிவன் உண்ட வரலாறு சனிக்கிழமை வருவதால் இந்த சனிப்பிரதோஷம் மகா பிரதோஷமாக கருதப்படுகிறது.
இந்த சனிப்பிரதோஷத்திற்கு உரிய விரதமிருந்து நந்தியையும் சிவனையும் அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் நல்லதே நடக்கும் ஆயிரம் பிரதோஷம் சென்ற மகிமை கிடைக்குமாம்.
இன்றைய சனிப்பிரதோஷ நேரமான 4.30 முதல் 6மணி வரையிலான நேரத்தில் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏதாவது சிவஸ்தலம் சென்று பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள்