ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதையை தந்தவர். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா இவ்வுலக உயிர்களின் நலன் தேடி அந்த நாராயணனே கிருஷ்ண அவதாரம் எடுத்து மனிதனாக பிறந்தார் பல லீலைகளை நடத்தினார் என்பது வரலாறு.
ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தது மதுரா நகரத்தில் இந்த மதுரா நகரம் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ளது. வசுதேவர் தேவகி தம்பதிக்கு கிருஷ்ணர் ஆவணி மாதத்தில் பிறந்தார்.
தாய்மாமன் கம்சன் கிருஷ்ணரின் தாய் தந்தையை துன்புறுத்தி சிறையில் அடைத்து இருந்ததால் சிறையில்தான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தார். இவரை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என வசுதேவர் பிருந்தாவனத்தில் வசித்து வந்த நந்தகோபர் யசோதை தம்பதிகளிடம் கிருஷ்ணர் ஒப்படைக்கப்படுகிறார் என்பது வரலாறு.
மதுராவில் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்ததாக கூறப்படும் சிறை அறையே கர்ப்பகிரகமாக கருதப்படுகிறது.
குழல் ஊதி குறும்பு செய்தும் மாடு மேய்த்து குறும்பு செய்வதும் , வெண்ணெய் திருடுவதும் கிருஷ்ணர் குறும்பாக செய்த விசயங்கள் ஆகும்.கிருஷ்ணன் பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையாகவே இருந்தார்.
தனக்கு மிக அதிக கொடுமைகள் செய்த மாமா கம்சனை தனது நண்பன் பலராமனுடன் சேர்ந்து பெரியவன் ஆனதும் கொன்றார். தனது ராஜ்ஜியங்களை தாத்தா உக்கிரசேனரிடம் ஒப்படைத்தார்.பாண்டவர்கள் இவருக்கு அத்தை மகன்கள் என்பதால் அவர்களிடம் நட்பு பாராட்டினார். மகாபாரதத்தில் அதை ஒட்டிதான் கிருஷ்ணர் கதாபாத்திரம் வருகிறது. எல்லாம் முடிந்த பிறகு துவாரகைக்கு சென்று புதிய ராஜ்ஜியத்தை நிறுவினார்
இள வயதில் பிருந்தாவனத்தில் இருந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் காதல் புரிந்தார்.
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருட்சேத்திரப் போரில் தனது சேனையை கௌரவர்களிடம் கொடுத்துவிட்டு தான் ஆயுதம் ஏந்தாமல் அர்ஜூனனின் தேரோட்டியாக பணிபுரிந்தார். இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அர்ஜூனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது.
இறுதிக்காலத்தில் துவாரகையில் ராஜ்ஜியத்தை நிறுவி மக்களுடன் வாழ்ந்தார். துவாரகை நகரம் முற்றிலும் அழிந்து விட்டது என கூறப்படுகிறது. கடலுக்கு அடியில் சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது. சில வருடம் முன்பு நடந்த ஆராய்ச்சியில் மகாபாரதத்திலும் பாகவதத்திலும் கூறப்பட்டுள்ள துவாரகை ஒத்த கடலுக்குள் மூழ்கிய நகரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் இப்போது உள்ள துவாரகை கிருஷ்ணர் வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் வகையில் அவருக்கு கோவிலும் மற்ற வழிபாடுகளுடனும் இன்றும் இருந்து வருகிறது.
இது குஜராத் மாநிலத்தில் தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ கிருஷ்ணரை நேசிப்பவர்கள் ஹிந்துவாக பிறந்தவர்கள் ஒரு முறையாவது ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த மதுராவுக்கும் அவர் வாழ்ந்த துவாரகை நகருக்கும் சென்று அவரை வழிபடுவதே மிகப்பெரும் பேறாகும்.