சதுரகிரி மலை கேள்விப்பட்டு இருப்பீர்கள், கொல்லிமலை கேள்விப்பட்டு இருப்பீர்கள், இவைகள் எல்லாம் சித்தர்களின் தலைமை பீடமாக கருதப்படும் மலைகள். இன்றளவும் இம்மலைகளில் சித்தர்கள் வாசம் செய்கிறார்கள்.
சில பக்தர்களுக்கு காட்சி கொடுத்திருக்கிறார்கள் என படிக்கிறோம். மேலும் இந்த காலத்திலும் பழனி, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் அதிகமான சித்தர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சித்தர் பூமியான தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது பிரம்மரிஷி மலை. பெரம்பலூருக்கு அருகில் இம்மலை உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத் தலைநகரிலிருந்து 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது எலம்பலூர். தேசிய நெடுஞ்சாலை 38 வழியாகச் செல்கையில் 2கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த இடத்தில்தான் பிரம்மரிஷி மலை உள்ளது.
இங்கு ஒரு புகழ்பெற்ற கங்கனேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. மலையில் ஆஸ்ரமம் அமைத்து பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறார் ராஜ்குமார் சுவாமிகள். இவர் ஒரு காலத்தில் கோழி கூவுது உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர்.
அதிகமான சினிமா பிரபலங்கள் இங்கு வந்து செல்கிறார்கள். பல பக்தர்களின் ஆன்மிக சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக இந்த மலை கருதப்படுகிறது.
இந்த மலையில் 210 சித்தர்கள் உயிர்ப்புடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் இங்கு வரும் பக்தர்களுக்கு நல்வழிகாட்டுவதாக நம்பப்படுகிறது.
இங்கு இருக்கும் தலையாட்டி சித்தரின் ஜீவசமாதிக்கு அதிகம் பக்தர்கள் வழிபடுகிறார்கள். இன்றளவும் பல பக்தர்கள் இவரை வழிபட வருகிறார்கள்.
பவுர்ணமிக்கு இக்கோவிலில் அதிக விசேஷம் என்பதால் அதிகம் பக்தர்கள் வருகிறார்கள்.
மலையேறும் பாதை கடினமாக இருக்காது இருந்தாலும் கவனமாக ஏற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியொரு ஆச்சரிய மலைக்கு நீங்களும் சென்று வாருங்கள்.இம்மலைக்கு சென்று வந்தால் பல அதிசயங்கள் நம் வாழ்வில் நிகழும் என நம்பப்படுகிறது.
சிவபெருமானின் அருளாலும் சித்தர்களின் வாசத்தாலும் இம்மலை புகழ்பெற்று விளங்குகிறது. பல அதிசயங்கள் அமானுஷ்யங்கள் இன்றளவும் நடைபெற்று வருகிறது.