பதினெட்டு சித்தர்களில் ஒருவரும் சித்தர்களில் மூத்தவராக கருதப்படுபவருமானவர் மஹான் அகத்திய பெருமான். இவருக்கு சிவபெருமான் தன்னுடைய திருமண கோலத்தை காண்பிக்கவில்லை என பொதிகை மலையில் தற்போது இருக்கும் பாபநாசத்தில் சிவபெருமான் தேவியுடன் காட்சியளித்ததாக வரலாறு.
இப்படிப்பட்ட அகத்திய பெருமான் சென்னைக்கு அருகில் பஞ்ச சேஷ்டி என்னுமிடத்தில் யாகங்கள் செய்துவிட்டு திருவனந்தபுரத்தில் இருக்கும் பத்மநாபஸ்வாமி கோவிலில் ஜீவசமாதி ஆகியுள்ளார்.பத்மநாபரான மஹா விஷ்ணு அனந்த சயனத்தில் இருக்கும் இங்கு பத்மநாபரின் கை அகத்தியரின் தலை மேல் வைத்து ஆசிர்வாதம் செய்வதை போல் இருக்கும் இதுவே அகத்தியர் இங்கு ஜீவசமாதியானதன் சான்றான விசயமாக உள்ளது.
இந்த கோவில் சென்றால் அகத்திய மஹரிஷியை மானசீகமாக மனதார வழிபட்டு வாருங்கள் மனம் மகிழ்ச்சியடையும்.