ரியல்மி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்: இந்தியாவில் வெளியாவது எப்போது?

இந்தியாவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ரியல்மி நிறுவனம் தனது புதிய சீரியஸான ரியல்மி சீரிஸ் 7 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிடும் தேதியை அறிவித்து உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அவ்வப்போது புதிய மாடல்…

676e2c0dd41961a23cb15b51880d9a9f

இந்தியாவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ரியல்மி நிறுவனம் தனது புதிய சீரியஸான ரியல்மி சீரிஸ் 7 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிடும் தேதியை அறிவித்து உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அவ்வப்போது புதிய மாடல் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துவரும் ரியல்மீ தற்போது ரியல்மி மற்றும் ரியல்மி ப்ரோ ஆகிய இரண்டு வகை மொபைல் ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் மூன்றாம் தேதி இந்த ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த ஸ்மார்ட்போனில் 2-ஆம் தலைமுறை குவாட் கேமரா செட்டப், மிகவேகமாக சார்ஜ் ஆகும் பேட்டரி ஆகியவை சிறப்பு அம்சங்கள் ஆகும். அதாவது 32 நிமிடங்களில் 0 முதல் 100 சதவிகிதம் வரை சார்ஜ் ஆகும்.

செப்டம்பர் 2ஆம் தேதி தான் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகும் என்றாலும் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் முன்பணம் ரூ.1000 செலுத்தி உறுதி செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி நிறுவனத்தின் மற்ற மாடல்கள் போலவே இந்த ரியல்மீ 7 மாடலும் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன