தகவல் பரிமாற்றத்திற்காக இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு செயலியாக வாட்ஸ்அப் இருந்துவரும் நிலையில் வாட்ஸ் அப்பை விட அதிக வசதி கொண்ட புதிய தகவல் பரிமாற்ற செயலி ஒன்றை திண்டுக்கல் பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் செய்துள்ளார்
இது வாட்ஸ் அப் செயலியை விட அதிக வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கொண்ட புதிய செயலி என்று அந்த மாணவர் தெரிவித்துள்ளார். இந்த மாணவர் உருவாக்கிய ஜெட் லைட் சேட் என்ற இந்த புதிய செயலியை கூகுள் நிறுவனம் ஒப்புதல் அளித்து பிளே ஸ்டோரில் வெளியிட்டுள்ளது
பிரனேஷ் என்ற இந்த மாணவர் கொரோனா ஊரடங்கு விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில் கூகுள் நிறுவனம் நடத்திய கோடிங் ஆன்லைன் வகுப்பு மூலம் பயின்றுள்ளார். அதன் மூலம் இந்த மாணவர் இந்த புதிய செயலியை உருவாக்கி உள்ளார்
இந்த செயலி மூலம் நாம் அனுப்பும் தகவல் அறிமுகம் இல்லாத நபர்கள் யாரும் பார்க்க முடியாது என்றும், அறிமுகம் இல்லாதவர்கள் பதிவிறக்கம் செய்யவும் முடியாது என்றும் கூறப்படுகிறது. மேலும் ஒரு தகவலை ஒரே நேரத்தில் 15 பேருக்கு ஷேர் செய்யலாம் என்றும், வாட்ஸ்அப் போன்றே ஆடியோ வீடியோ கால் மூலமும் உரையாடலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த செயலி தற்போது அதிக நபர்களால் டவுன்லோட் செய்யப்பட்டு வருகிறது