நவராத்திரி மற்ற கோவில்களை போலவே ராமேஸ்வரம் ராம நாத ஸ்வாமி கோவிலிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இராமாயணக்கதை அடிப்படையில் தோன்றிய கோவில் இக்கோவில் . ராமபிரான் இராவணனை கொன்ற பாவம் நீங்க இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் வந்து சீதா தேவியுடன் இணைந்து மணலால் ராமலிங்க ஸ்வாமி, அம்பிகை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் .
இங்கு அனைத்து விதமான தோஷக்குறைபாடுகளும் நீங்குகிறது. முக்கியமாக இது பித்ரு பரிஹார ஸ்தலம் என்றாலும். பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர்களுக்கு பல காரியங்கள் சரி வர செய்யப்படாததால் வயது வந்த பெண்களுக்கு கூட திருமணத்தடை, குழந்தையின்மை போன்ற பிரச்சினைகள் எல்லாம் ஏற்படுகிறது.
இந்த ராம நாத ஸ்வாமி கோவில் தான் தேசிய அளவில் பித்ரு பரிகார ஸ்தலங்களில் ஒன்றாக உள்ளது. வடக்கே காசி தெற்கே ராமேஸ்வரம். இப்படி சிறப்பு வாய்ந்த ராமேஸ்வரத்தில் கடலில் குளித்து பித்ரு பரிஹார பூஜை செய்து, நவராத்திரியில் ஒரு நாளாவது ராம நாதர் சன்னதிக்கு அருகிலேயே காட்சியளிக்கும் அன்னை பர்வதவர்த்தினியையும் வணங்கினால் பித்ரு தோஷம் திருமணத்தடை, புத்திரத்தடைகளை அகற்றி வாழ்வில் வளம் காண வைப்பாள் பர்வதவர்த்தினி