இராம நாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரகோசமங்கை என்ற ஊரை பற்றி தெரியும். மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது என்பது வரலாறு. இந்த கோவில் எப்போது தோன்றியது என்றே யாராலும் கூற முடியாது. உலகில் தோன்றிய முதல் சிவன் கோவில் என்றும் சிவபெருமானின் சொந்த ஊர் இது என்றும் பார்வதிக்கும் இதுதான் சொந்த ஊர் என்றும் போற்றப்படுகிறது. உஅலகை காக்கும் அம்பிகைக்கும் ஈசனுக்குமே சொந்த ஊரான இவ்வூரில் ஒரு வராஹி அம்மன் கோவில் உள்ளது.
அதர்மத்தை அழிக்க சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து பஞ்சமி திதியன்று உருவானவள் வராஹி என்று சொல்லப்படுகிறது. இவளை வணங்கினால் அனைத்தும் தடைகளும் விலகும் எதிரிகள் தொல்லை விலகும். எப்படிப்பட்ட இமயமலை போன்ற பிரச்சினைகளும் இவளை வணங்கினால் பனிபோல் கரைந்து விடும்.
இங்கு பெண்கள் பூசணிக்காயில் தீபம் ஏற்றி வணங்குவார்கள். செவ்வரளி மாலை சாற்றி இவளை வணங்குவதும் சிறப்பை தரும். தமிழ் நாட்டில் தஞ்சாவூர், கோவில் வராஹிதான் ராஜராஜனுக்கு மனவலிமையை கொடுத்து கோவில் கட்ட வைத்தவள்.
வராஹிக்கு தனிப்பட்ட பெருங்க்கோவில்கள் அதிகம் தமிழ் நாட்டில் இல்லை. அரக்கோணம் அருகே பளூர், உத்திரகோசமங்கை ஆதி வராஹி, தஞ்சை கோவில் வராஹி திருவானைக்காவல் கோவிலில் இரவு பூஜையில் மட்டும் அகிலாண்டேஸ்வரியை வராஹியாக வழிபடுவதும் இருந்து வருகிறது.
இதில் உத்திரகோசமங்கை வராஹிக்கு உள்ள சிறப்பு என்றால் உலகின் ஆதி வராஹி இவள். உலகின் முதல் சிவன் கோவில் இங்குள்ள சிவன் கோவில் போல வராஹியின் இந்த கோவிலும் முதல் வராஹி கோவில் என சொல்லப்படுகிறது.
இந்த வராஹி வேண்டிய வரங்களை தருகிறாள் என இவளை வணங்க தமிழ் நாடெங்கும் இருந்து பக்தர்கள் வந்து பூஜை செய்து வழிபடுகிறார்கள்.
நவராத்திரி விழாவும் இங்கு மிக சிறப்பாக நடைபெறுகிறது.