காசி ஸ்ரீ அன்னபூரணி தாயை வணங்கினால் நமக்கு அன்னத்துக்கு பஞ்சம் இருக்காது. தரித்திர நிலை விலகும் வாழ்வில் சுபிட்சம் பிறக்கும் இப்படிப்பட்ட அன்னபூரணி தாய் காசி நகரில் அருள்பாலிக்கிறாள். இப்படிப்பட்ட காசி நகரத்துக்கு நாம் செல்ல ரயிலில் ஒரு வாரம் ஆகி விடும். வயதானவர்கள் உடல் நிலை சரி இல்லாதவர்கள் அன்னபூரணியை தரிசிக்க வேண்டும் என்று விருப்பம் இருக்கும் ஆனால் செல்ல முடியாது.
இப்படிப்பட்டவர்களுக்காக தேனி மாவட்டம் குச்சனூரில் சனீஸ்வரர் கோவில் அருகே ஒரு அன்னபூரணி கோவில் இருக்கிறது. காசியில் இருப்பது போலவே அன்னபூரணி சிலையை வடிவமைத்து இருக்கிறார் இப்பகுதியை சேர்ந்த பக்தர் ஒருவர்.
அன்ன தரித்திரம் நீக்கும் அன்னபூரணியின் அருளை பெற விரும்புபவர்கள் குச்சனூர் சனீஸ்வரன் கோவிலில் பரிகார ரீதியாக செல்லும்போது இங்குள்ள அன்னபூரணி அம்மன் ஆலயத்திலும் வழிபட மறவாதீர்கள்.
காசிக்கு அடிக்கடி சென்று வந்த பக்தர் ஒருவரால் கட்டப்பட்ட கோவில் இது.