நவராத்திரி அன்று அனைவரும் தனது வீடுகளில் பூஜைகள் செய்வார்கள், கொலு வைத்து இருப்பவர்கள் தனது வீடுகளில் 9 நாட்களும் விதவிதமான மலர்களைக் கொண்டு தேவியரை பூஜிக்க வேண்டும். 9 நாட்களுக்கும் ஒவ்வொரு வகையான மலர்களை கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனை வழிபடுகின்றனர். முதள் நாள் அன்று வெண்தாமரையும் இரண்டாம் நாள் அன்று மல்லிகை மலரும் மூன்றாம் நாள் அன்று மரிக்கொழுந்து, சம்பங்கியும் வைத்து தேவியை வணங்குகின்றனர்.
அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி அம்மனை வழிபடுகின்றனர். நான்காம் நாள் அன்று ஜாதி மல்லியும், ஐந்தாவது நாள் அன்று முல்லை மலர் கொண்டும், ஆறாம் நாள் அன்று சிவந்த நிறம் உள்ள மலர்களை கொண்டும் தேவியை வழிப்படுகின்றனர்.
அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி அம்மனை வழிப்படுகின்றனர். அவருக்கு ஏழாம் நாள் முல்லை மலர் கொண்டும், எட்டாம் நாள் அன்று ரோஜாப்பூ கொண்டும், ஒன்பதாம் நாள் அன்று செந்தாமரையை கொண்டு தேவியை வழிபடுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் பூஜைக்கு தேவையான மலர்களை கொண்டு வழிபாடு செய்து தேவியரை வணங்குகின்றனர்.