நவராத்திரி விரதம் மேற்கொள்ளுவோர் அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் முதல் எட்டு நாட்களும் பகல் உணவின்றி இரவு பூஜை முடியும்வரை சாப்பிடாமல் இருந்து, பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.
பூஜை வழிபாடுகளும், உணவுப் பொருட்களும் ஒவ்வொரு நாளும் வகை வகையாக செய்தல் வேண்டும்.
சரஸ்வதிக்கு படைக்கப்படும் உணவுகள்:
கல்வியின் அதிபதியான சரஸ்வதிக்கு விஷேச பூஜைகள் இந்த மொன்ன்று நாட்கள் நடைபெறும், குழந்தைகள் நிச்சயம் இதில் பங்குபெறுதல் வேண்டுன்.
நவராத்திரியின் 7வது நாளில் எலுமிச்சை சாதம் அல்லது தயிர் சாதம் செய்து படையல் இடுதல் வேண்டும், பால் சாதம் வைத்தல் கூடாது. வெண் பொங்கல், கொண்டக்கடலை சுண்டல் போதுமானதாக இருந்தாலும் சிலர் சர்க்கரைப் பொங்கலை நிச்சயம் செய்து வழிபடுவர்.
7வது நாளில் பால் சாதம், தேங்காய் சாதம், புளியோதரை இவற்றில் ஏதாவது 2 மற்றும் சுண்டல் இவற்றுடன் பால் பாயசம் அல்லது பருப்பு பாயசம் இடம் பெறுதல் வேண்டும்.
கடைசி நாளான 8வது நாள் சர்க்கரை பொங்கலுடன் உளுந்து வடை, பூம்பருப்பு வேர்க்கடலை, பூம்பருப்பு சுண்டல், எள் பாயாசம், கேசரி, எள் உருண்டை ஆகியவற்றை படைக்கிறார்கள்.
இந்த மூன்று நாட்களும் கடுமையாக பூஜை செய்வொருக்கு சரஸ்வதியில் அருள் நிச்சயம் கிட்டும்.