நவராத்திரி பூஜை என்பது விசேஷமானது ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் வருகிறது நவராத்திரி ஒன்பது நாட்களும் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் வழிபட்டு பத்தாவது நாள் விஜயதசமியாக அம்பிகை அசுரனை அழிக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது.
ஒன்பது நாட்கள் நவராத்திரிக்கு கொலு வைத்து பூஜை செய்வது மிகுந்த சிறப்பை தரும். இந்த பூஜையால் நமக்குள் இருக்கும் நமக்குள் எழும் தீயசக்திகள், உணர்வுகளை சுட்டு பொசுக்குகிறாள் அம்பிகை.
நவராத்திரி பூஜைகள் தொடர்ந்து செய்வதால் நமக்குள் இருக்கும் தீயவை அழிக்கப்படுவதாகவும் நல்லவை தழைப்பதாகவும் தேவி மஹாத்மியம் கூறுகிறது.