நாக தோஷத்தை போக்கும் கருட பஞ்சமி விரதமிருக்கும் முறை..

By Staff

Published:


7aabc6f1f964b543988dc3bb4f37d7dd

ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இந்த விரதத்தை கடைப்பிடிக்க தொடங்க வேண்டும். காலையில் எழுந்து குளித்து விட்டு தூய்மையான ஆடைகளை அணிந்து வீட்டை தூய்மைப்படுத்தவேண்டும். வீட்டில் தூய்மையான இடத்தில் பூக்களால் அலங்கரித்து ஐந்து நிறங்கள் கொண்ட கோலங்கள் போட வேண்டும்.

கோலத்தின் நடுவில் ஒரு பலகை போட்டு, அதன் மேல் வாழை இலையை விரித்து, அதில் பச்சரிசியை கொட்டிவைத்து நமது சக்திக்கு ஏற்றப்படி வெள்ளி, தாமிரம் அல்லது மண் இவற்றில் ஏதாவது ஒன்றால் செய்யப்பட்ட பாம்பின் உருவத்தினை அரிசியின்மேல் வைக்க வேண்டும். பாம்பின் படத்தின் நடுவில் மஞ்சளால் செய்யப்பட்ட கவுரிதேவியின் வடிவத்தை வைத்து அலங்காரங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும். பூஜையில் பத்து முடியுள்ள நோன்பு கயிற்றை வைத்து, பூஜை முடிந்ததும் வீட்டில் உள்ளோர் கட்டிக் கொள்ள வேண்டும்.

40a1de45784436df4d186f0dd1e0afd9

பூஜையின்போது கீழ்க்காணும் கருடாழ்வார் மந்திரத்தினை உச்சரிக்கவேண்டும்..

காலாக்னி வர்ணாய ஏஹ்யேஹி 
கால நல லோல ஜிக்வாய 
பாதய பாதய மோஹய 
மோஹய வித்ராவய வித்ராவய 
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய 
ஹந ஹந தஹ

இந்த பூஜை செய்வதால் நாகதோஷம் நீங்கும். நினைத்த காரியம் வெற்றி கிட்டும். இவ்வாறு, பெண்கள் 10 ஆண்டுகள் தொடர்ந்து விரதம் இருந்து வந்தால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர். கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறி, சகல விதமான செல்வங்களையும் அடைவர்.

Leave a Comment