அன்னதானம் எங்கு செய்யலாம்?

By Staff

Published:

தோஷங்கள், சாபங்கள் நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம்:

முன் ஜென்மத்தில், இந்த பிறவியில் தெரிந்தோ தெரியாமலோ பிறர்க்கு பாவங்கள் செய்து விடுவதால் வாழ்க்கையில் பல சோதனைகளை சந்திக்கின்றோம். மனித பிறவி மட்டும் இல்லாமல் அனைத்து ஜீவன்களும் செய்கின்ற துன்பத்தின் விளைவாக முன்னேற்றம் இல்லாத நிலை, தோஷம் மற்றும் சாபம் ஏற்பட்டு விடும்.

75dddd71b06efd7afe9121850b725d64

இந்த தோஷம், சாபங்கள் நீங்க தொடர்ந்து அன்னதானம் செய்தால் வாழ்க்கையில் படிப்படியாக சோதனைகள் குறைய தொடங்கும். தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் ஆகும். உங்களால் இயன்ற அளவிற்கு செய்தால் போதுமானது. பசு மாட்டிற்கு தீவனம், பழம் வாங்கி தரலாம். இயலாதவர்களுக்கு ஒரு வேலை உணவு வாங்கி தருவதால் நன்மை உண்டாகும்.

அன்னதானம் எங்கு செய்யலாம்?:

  • உங்கள் வீட்டில் அருகில் உள்ள கோவில் பிரசாதம் செய்வதற்கு காசு கொடுக்கலாம். நீங்கள் செய்தும் அம்மன்  கோவில்களில் கொடுக்கலாம்.
  • பழமையான சிவன் கோவில்களில் அன்னதானம் செய்தால் சிறப்பாக இருக்கும். உங்களால் இயன்ற சுண்டல், கேசரி, தயிர் சாதம், புளியோதரை, பழம் போன்றவற்றை வரும் பக்தர்களுக்கு வழங்கலாம். மேலும் பிரதோஷம் அன்று செய்தால் உங்கள் தோஷங்கள் அனைத்தையும் சிவபெருமான் அகற்றுவார்.
  • குல தெய்வக்கோவில்கள் அன்னதானம் வழங்கலாம்.
  • திருவண்ணாமலை, சதுரகிரி, மலைமீது இருக்கும் கோவில்களில் அன்னதானம் வழங்கினால் மேலும் சிறப்பாக இருக்கும்.

Leave a Comment