பிள்ளையார் சுழி போடுவதன் காரணம்!

By Staff

Published:

 

“திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் யானை முகத்தானை
காதலால் கூப்புவர்தம் கை”

வாக்கு வளம், செல்வம் , தொழிலில் மேன்மை, பெருமை, உருவப்பொலிவு இவையாவும் ஆனைமுகத்தானை வணங்குபவருக்கு கிடைக்கும்ன்னு சொல்வாங்க. இப்படி எதை செய்தாலும் ஆனைமுகத்தானை வணங்கி செய்வது நம் வழக்கம். அந்த பழக்கம் செயலில் மட்டுமில்லை. எழுதுவதிலும் உண்டு. எதை எழுதினாலும் பிள்ளையார் சுழி போட்டு எழுதுவது வழக்கம்.

கடிதம் முதற்கொண்டு மளிகைசாமான் பட்டியல்வரை இது தொடரும். 2000 வருசங்களின் தொடக்கத்தில் தேர்வுத்தாளில்கூட பிள்ளையார் சுழி போடப்பட்டது. மதச்சார்புடைய குறியீடுகள் தேர்வுத்தாளில் இருக்கக்கூடாதுன்னு சட்டம் வந்தபிறகே அப்படி பிள்ளையார் சுழி போடுவதில்லை…

பிள்ளையார் சுழிப்போட காரணம் என்னன்னு கேட்டா, பேனா சரியா எழுதுதா?! இல்ல காகிதத்தில் மை ஊறுதான்னு பார்க்க போடுறாங்கன்னு நம்ம பசங்க கிண்டலா சொல்வாங்க. அது  ஒருவகையில் உண்மையும்கூட… அந்த காலத்தில் பனைஓலை நறுக்கில் எழுத்தாணியால் எழுதினாங்க. பனைஓலையின் தரத்தினையும், எழுத்தாணியின் கூர்மையையும் சோதிக்க அப்படியொரு ஏற்பாடு உண்டாகியும் இருக்கலாம்ன்னும் ஒரு வாதம் உண்டு.

05c29c04a460a1af7ec8d425fe58b244

இனி உண்மையான காரணம் என்னன்னு பார்க்கலாம்..

’ஓம்’ன்றது பிரணவ மந்திரம். இந்த ’ஓம்’ என்ற மந்திரத்துக்கு பிறகே எந்தவொரு கடவுளின் பெயரோ அல்லது மந்திரமோ வரும். ‘ஓம்’என்பதை அ+உ+ம் என பிரிக்கனும். அதாவது, அ,உ,ம் இந்த எழுத்துகளின் உச்சரிப்பின் கூட்டே ’ஓம்’.  இதில் ‘அ’என்பது படைத்தலையும், ‘உ’என்பது காத்தல் என்பதையும், ‘ம்’என்பது அழித்தலையும் குறிக்கும்.

’அ’ என்பது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கும். ‘உ’என்பது மெய்,வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களை குறிக்கும். இந்த ஐம்புலன்களை அடக்கிக்கொண்டால் ஆயுள் கூடும். ஆயுள் கூடக்கூட நம் விருப்பங்கள் தங்கு தடையின்றி நடக்கும். மேலும் ‘உ; என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மைப் பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால், நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காகவே, ’உ’ வடிவத்தை எழுதுகிறோம்.

‘உ’ எப்படி பிள்ளையார் சுழி ஆனதுன்னும், இந்த ஒற்றை  இனி பார்க்கலாம்.

சுழி’ யை “வளைவு!’ “வக்ரம்’ என்றும் சொல்வர். பிள்ளையாரின் தும்பிக்கை நுனியைப் பார்த்தால், வளைந்து சுருண்டிருக்கும். இதனால், அவரை, “வக்ரதுண்டர்’ என்றும் அழைப்பதுண்டு.

பிள்ளையார் சுழியை, ‘உ’ என எழுதும்போது, முதலில் ஒரு சிறு வட்டத்தில் துவங்குகிறது. வட்டத்திற்கு முடிவே கிடையாது. விநாயகரும் அப்படித்தான். அவரை அறிந்து கொள்வது என்பது பிரம்மபிரயத்தனம். வட்டம் என்பது இந்த பிரபஞ்சத்தை குறிக்குது. இதற்குள் பலவித உலகங்களும், வானமண்டலமும் அடங்கியுள்ளது.  அதாவது, விநாயகப் பெருமானுக்குள் சர்வலோகமும் அடக்கம். அவரது பெருவயிறும் அதையேதான் காட்டுகிறது. அந்த வயிற்றுக்குள் அவர் சர்வலோகத்தையும் அடக்கியுள்ளார் என்பது நம்பிக்கை.

‘உ’ எனும் சுழியில் வட்டத்திற்குப் பிறகு, ஒரு நேர்கோடு நீள்கிறது. இதை சமஸ்கிருதத்தில், ‘ஆர்ஜவம்’ என சொல்வர். இதற்கு, ‘நேர்மை’ எனப் பொருள். ‘வளைந்தும் கொடு, அதேச்சமயம் நேர்மையை எக்காரணம் கொண்டும் விட்டு விடாதே..’ என்பதே இந்த பிள்ளையார் சுழியின் தத்துவம்.

வட்டவடிவிலான எந்த பொருளும் சுழல அச்சு வேண்டும். தெய்வாம்சம் நிரம்பிய சக்ராயுதமே விஷ்ணுபகவானின் விரலினை அச்சாகக்கொண்டுதான் சுற்றுகிறது.  உலக உருண்டை உருள அச்சு எதுமில்லைன்னு அறிவியல் சொன்னாலும்,  நம் கண்ணுக்கு தெரியாத ஏதோவொரு சக்தி இவ்வுலகை நேர் அச்சில் தாங்கி இருக்கு.

இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் பிள்ளையார் சுழியிலிருக்கும் நேர்க்கோட்டைப்போல நேர்மையை கடைப்பிடிக்கனும்ன்னு இச்சுழி உணர்த்துது.  அதேப்போல, வியாபாரத்தில் உ பிள்ளையார் சுழி போட்டு அதன்மேல் லாபம்ன்னுஎழுதுவாங்க.  இவ்வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் நேர்வழியிலானதாக இருக்கட்டுமென்பதே இதன் பொருள்.  முதன்முதலில் எழுத்துவடிவத்தை கொண்டுவந்தவர் பிள்ளையார். எழுத்துவடிவில் தோன்றிய முதல்நூல் வியாச பாரதம்.

அதனால், பிள்ளையார் சுழி போட்டு எதையும் தொடங்குவோம்… பாருங்க! இதிலும் ஓம் வருது!!