இறைவனின் ஒவ்வொரு அவதாரமும் நமக்கு ஒரு சேதி சொல்லும். விஷ்ணு பகவான் எடுத்த அவதாரங்களில் மிக முக்கியமான 10 அவதாரங்களை தசாவதாரம்ன்னு சொல்வார்கள். தசம் என்றால் பத்து என்று பொருள்.
அணுத்துகள்களின் மோதலால் பூமி உருவானது. ஒரு செல் உயிரி உருவானது. ஒரு செல் உயிரிலிருந்து படிப்படியாக பரிணாம வளர்ச்சி கண்டு இன்று மனிதன் வந்து நிற்கிறான். மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு காரணமான மிக முக்கியமான உயிரினங்களுக்கும் விஷ்ணுபகவான் எடுத்த தசாவதாரங்களுக்கும் ஒற்றுமை உண்டு. அவை என்னவென பார்க்கலாம்…
தசாவதாரங்களில் முதன்மையானது . மச்ச அவதாரம்– மச்சம்ன்னா மீன் என பொருள். ஒரு செல் உயிரிகள் வளர்ந்து பல்கி பெருகு, புல்லாகி, பூண்டாகி, தாவரமாகியது. பிறகு தாவரத்துக்கு அடுத்தபடியாக உலகில் தோன்றிய முதல் உயிரினம் கடலில் தோன்றிய unicellular உயிரினமாகிய கடல் உயிரினம். இதைத்தான் மச்ச அவதாரம் நமக்கு உணர்த்துகிறது.
அடுத்து கூர்ம அவதாரம். கூர்மம் என்றால் ஆமை. இது நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மைக்கொண்டது. பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்தின்படி reptiles ஊர்வன நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம்
அடுத்தது வராக அவதாரம்.. வராகம் என்றால் பன்றி. பன்றி குட்டிப்போட்டு பாலூட்டும் பாலூட்டியை சார்ந்தது. பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்ட வளர்ச்சியின்படி mammals, பாலூட்டி உயிரினம்
4. நரசிம்ம அவதாரம்- பாதி மிருகம் பாதி மனிதன்..பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம். மிருகத்தோடு மிருகமாய் வாழ்ந்த கற்கால மனிதனை எடுத்து சொல்லும் இந்த அவதாரம்
அடுத்தது, வாமண அவதாரம்- ஆதிமனிதன் இப்போதைய சராசரி மனிதனைவிட குள்ளமாய் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இது மனிதனின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம்…
விஷ்ணுவின் அடுத்த அவதாரம் பரசுராம அவதாரம் மிருகத்திலிருந்து மனிதனாக மாறிய பரிணாம வள்ர்ச்சியடைந்த மனிதன், வேட்டையாடி கிடைத்த உணவை உண்டு வாழ்ந்துவந்தான். அதை உணர்த்தும் விதமாகவே பரசுராமரின் கையில் வேட்டைக்கு உதவும் வேல், கத்தியெல்லாம் உள்ளது.
அடுத்த அவதாரம் பலராமர் அவதாரம்– வேட்டையாடி நாடோடியாய் வாழ்ந்த மனிதன், நதிக்கரையோரம் தங்கி விவசாயம் செய்து வாழ ஆரம்பித்தான். ஒரு சமுகமாக வாழ ஆரம்பித்த மனிதனே அடுத்த பரிணாம வளர்ச்சி . இதை உணர்த்தவே பலராமன் கையிலிருக்கும் ஏர் உணர்த்துகிறது.
விஷ்ணுவின் அடுத்த அவதாரம் ராம அவதாரம்– விலங்குகளை வேட்டையாடும் மனிதனாக இருந்தவனை, தாய், தந்தை, மக்கள், மனைவி , பிள்ளைகள், தியாகம், பொறுப்பு என சமுதாயத்திற்கு ஒப்பான மனிதனாக பரிணாம வளர்ச்சி அடைந்ததை உணர்த்தும் அவதாரம் இது.
அடுத்தது, கிருஷ்ணர் அவதாரம்– சமூகம், விவசாயம் செய்து வாழ்ந்த மனிதன் தனக்கான நீதி தர்மங்களை வகுத்தான். வாழ்க்கை நெறிமுறைகள்,தர்மம்,அதர்மம் என்பதை போதிக்கும் ஆசானாகவும், நாகரீக வளர்ச்சியின் பரிணாம வளர்ச்சியை அடைந்ததை எடுத்துக்காட்டுகிறது இந்த அவதாரம்.
எங்கெல்லாம் அநீதி நடக்கின்றதோ அங்கெல்லாம் நான் அவதரிப்பேன் என்று கீதையில் கிருஷ்ணராய் வந்த விஷ்ணுபகவான் சொல்லி இருக்கார். பல யுகங்களில், பழிபாவத்துக்கு அஞ்சாத காலக்கட்டம் கலியுகம். கொலை, கொள்ளை, கற்பழிப்பு என பல அநீதிகல் நடக்கும் இந்த காலக்கட்டமே கலியுமாகும். தீயவைகளை அழிக்க இனி, இறைவன் எடுக இருக்கும் அவதாரமே கல்கி அவதாரமாகும்..
விஷ்ணு பகவான் எடுத்த இந்த பத்து அவதாரங்களுக்கும், மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கும் உண்டான ஒற்றுமைகளை தெரிந்துக்கொண்டீர்கள்தானே?!