ஒரு நாள் சிவனின் துணைவியான பார்வதி தேவி, தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அது ஒரு ஆண்குழந்தையாகும்படி கீழேபோட்டுள்ளார்.
அது ஆண் குழந்தையாகிவிட்டது, அந்த ஆண் குழந்தையிடம், “நான் குளித்துவிட்டு வரும்வரையில் வேறு யாரையும் உள்ளே விட வேண்டாம்” என்று சொல்லி அதை வாயிற்படியில் உட்காரவைத்துள்ளார்.
அப்போது இதனை அறியாத பார்வதியின் பிராண நாதன் சிவ பெருமான் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது பிள்ளையார் பரமசிவனிடம், “பார்வதியைப் பார்க்க அனுமதிக்க மாட்டேன்” என்று தடுத்துள்ளார்.
அதனால் கோபம் ஏற்பட்டு சிவபெருமான் தன் கையிலிருந்த வாளாயுதத்தால் பிள்ளையார் தலையை கீழேத் தள்ளிவிட்டு உள்ளே போய் உள்ளார்.
சிவன், காவலன் தலையை வெட்டி வந்ததாகக் கூற, இதனைப் பொறுக்க முடியாத பார்வதி தேவியார் சிவனிடம் கோபம் கொண்டு காளியாக மாறினார்.
அப்போது கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஓட்ட வைத்து உயிர் கொடுக்க எண்ணி, யானையின் தலையை வெட்டி, குழந்தையின் கழுத்தில் வைத்து, உயிரைக் கொடுத்துள்ளார் சிவபெருமான்.