உலகை ஆளும் பரமசிவனின் புதல்வரும், பார்வதியின் சக்தியால் உருவானவரும், தம்பிக்கு தாய், தந்தையே உலகம் என்று கற்பித்தவரும் தான் முழு முதற் கடவுள் விநாயகர்.
பிள்ளையாரை கணபதி என்றும், விநாயகன் என்றும், என்றும், விக்னேஸ்வரன் என்றும், இன்னும் பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதும் உண்டு.
இந்துக்கள் தங்களுடைய எந்த காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும், கடவுள்களுக்கெல்லாம் முதல் கடவுளாக விளங்குபவர் என்பதும் அனைவரும் அறிந்ததே ஆகும்.
இவரை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
விநாயகர் சகஸ்ரநாமம்:
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
விநாயகர் காயத்ரி மந்திரம்:
வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.
விநாயகர் ஸ்லோகம்:
மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
இம் மந்திரத்தை மற்ற நாட்களைவிட விநாயகர் சதுத்தி நடக்கிற, 10 நாட்களும் குளித்து விரதமிருந்து, விநாயகர் சிலையின் முன் அமர்ந்து குறைந்தது 15 முறை சொல்ல வேண்டும். விநாயகர் நாம் கேட்ட அனைத்தையும் அருளுவார்.