உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமானது தீபாவளி ஆகும். அதற்கு அடுத்தபடியாக அதிகப்படியான மக்களால் கொண்டாடப்படுவது, முழு முதற் கடவுளான விநாயகரின் பிறந்தநாளைத் தான்.
அனைத்துக் கடவுளின் மேம்பட்டவரான முழுமுதற்கடவுள் கடவுளும், ஈசனின் மகனும், தமிழ்க் கடவுள் முருகனின் அண்ணனுமான விநாயகர் பிறந்த தினம் தான் விநாயகர் சதுர்த்தி ஆகும்.
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.
இந்த வருடம் ஆகஸ்ட் வியாழனன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி ஒரே மாதிரியான செயல் முறைகளில் கொண்டாடப்படுவதில்லை. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு முறையில் கொண்டாடப்படுகிறது.
இது ஆதிகாலம் தொட்டே கொண்டாடப்பட்டு வந்தாலும், இந்த அளவு பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் காலத்திலிருந்து தான். அவர் காலத்தில் விநாயகர் சதுர்த்தி என்பது நாட்டின் மிக முக்கிய திருவிழாவாக்க் கொண்டாடப்பட்டது.
இது ஒருநாள் நடைபெறும் திருவிழாவாக இல்லாமல் வாரங்களைக் கடந்து கொண்டாடப்பட்டதாக இருந்தது. நாடெங்கும் விநாயகர் நாடகங்கள் நடத்தப்படும், ஒரு வார காலத்திற்கு விநாயகர் தொடர்பான பாடல்கள் பாடுதல், கூத்து நடத்துதல் என விநாயகர் பற்றிய வரலாற்றினை பாமர மக்களுக்கும் தெரியப்படுத்தியவர் சிவாஜி தான்.
அவருடைய காலத்தில்தான் விநாயகர் மாபெரும் விழாவாக உருவெடுத்தது.