விநாயகர் சிலைகளில் இத்தனை ரகங்களா?!

By Staff

Published:

விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்போது பொதுவாக விநாயகர் சிலையினைத் தேர்ந்தெடுப்பதிலே ஒரு ஒரு போட்டி நிலவுகிறது, அதன் பின்னர் விநாயகரை அலங்காரம் செய்வதில் வித்தியாசமான முறையில் ஒவ்வொரு இடங்களில் அலங்கரிக்கப்படுகிறது.

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் கடந்த ஆண்டு முழுக்கமுழுக்க வேர்க்கடலையால் விநாயகர் சிலை செய்யப்பட்டிருந்தது. ஒடிஸா மாநிலம் பூரியில் உள்ள கடற்கரையில் இருக்கும் மணலினால் தத்ரூபம் கொஞ்சம் கூடக் குறையாமல் விநாயகர் சிலை செய்யப்பட்டிருந்தது.

2490501eb4a0331125e0fe6bb9bb39b4

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் உள்ள விநாயகர் கோயில் ஒன்றில் விநாயகருக்கு மிகப் பெரிய சிலை அளவில் லட்டுகள் படைக்கப்பட்டிருந்தது.

அதுபோக சில இடங்களில் முழுவதும் பழங்களால், அதுவும் விநாயகருக்கு பிடித்தமான பழங்களால் சிலை செய்யப்படுவது வழக்கம், சில இடங்களில் முழுவதும் அருகம்புல்லினைக் கொண்டு பச்சை நிறத்தில் கண்ணைக் கவரும் வகையில் விநாயகர் சிலை செய்யப்படுகிறது.

ஆந்திரபிரதேசத்தில் ஒருமுறை முழுவதும் கொழுக்கட்டையாலேயே செய்யப்பட்ட விநாயகர் வீதியிலே அமைக்கப்பட்டிருந்தார். இன்னும் சில இடங்களில் காய்களிலேயே விநாயகர் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருப்பார்.

ஆனால் இவை அனைத்தையும்விட மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரே கேட்ட வரங்கள் அனைத்தையும் வாரி வழங்குவார்.

Leave a Comment