விநாயகர் ஆனைமுகன் ஆன கதை!!!

By Staff

Published:

விநாயகர் அவதரித்த தினத்தை தான் நாம் விநாயகர் சதுர்தியாக கொண்டாடி வருகிறோம். விநாயகர் என்பதன் அர்த்தம் என்னவென்றால்

வி – என்பது இதற்க்கு மேல் ஒன்றும் இல்லை என்று பொருள்

நாயகர் – தலைவன் என்று பொருள்.

“இதற்க்கு மேல் பெரியவர் யாருமில்லை” என்பதையே நாம் விநாயகர் என்று அழைக்கின்றோம். எனவே தான் விநாயகரை முழு முதல்  கடவுள் என்று நாம் கூறுகிறோம். மேலும் கணபதி என்றால் கணகங்களுக்கு அதிபதி என்று பொருள்.

f90539ccef930ecbf3a9b38755453352

ஒரு முறை சிவபெருமான் இல்லாத சமயத்தில் பார்வதி தேவி நீராட செல்லவிருந்தார், அக்கணம் தமக்கு காவலுக்காக நீராட வைத்திருந்த சந்தனத்தை வைத்து ஒரு உருவம் உண்டாக்கி அதற்க்கு உயிரூட்டினார். மேலும் அதனை தன் பிள்ளையாக நினைத்துக்கொண்டார்.

அதன் பின் யாரையும் உள்ளே விட கூடாது என்று அறிவுறுத்தி விட்டு நீராட சென்றார். அப்பொழுது சிவபெருமானை  உள்ளே விட அனுமதிக்காததால் கோபம் கொண்ட சிவபெருமான் தலையை துண்டித்தார். பின்னர் தலையில்லாமல் கிடந்த தன் மகனை கண்டு மிகுந்த கோபம் அடைந்தார். பின் காளியாக அவதரித்து கண்ணில் கண்டதையெல்லாம் அழித்தார்.

தேவர்கள் இதை பற்றி சிவபெருமானிடம் முறையிட அவரோ என்ன செய்வதறியாமல் சிப்பாய்களை அழைத்து கண்ணில் தென்படுவதன் தலையை வெட்டி எடுத்து வர சொன்னார். அவர்கள் அவசரத்திக்காக தாம் முதலில் கண்டயானையின் தலையை  கொய்து வந்தனர். பின்பு சிவபெருமானோ அந்த தலையினை முண்டத்தின் மேல் வைத்து உயிரூட்டினார். மேலும் அதற்க்கு கணேசன் என பெயறும் சூட்டினார். இது நடந்தது ஒரு சதுர்தி நாள் அன்று எனவே இந்த நாளை நாம் விநாயகர் சதுர்தியாக கொண்டாடி வருகிறோம்.

Leave a Comment